Sports
"இனி என்னிடம் ஆலோசனை கேட்காதே" - ருத்துராஜிடம் கூறிய தோனி... பத்தினாத் வெளியிட்ட தகவல் !
நடப்பாண்டு ஐ.பி.எல் தொடர் தற்போது கோலாகலமாக நடைபெற்று வருகிறது. சென்னை அணிக்கு கிட்டத்தட்ட 14 ஆண்டு காலம் தோனி தலைமை தாங்கி நிலையில் தற்போது ருதுராஜ் கேப்டன் ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
ரஞ்சி கோப்பை தொடர் மகாராஷ்டிரா அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் செயல்பட்டு வரும் நிலையில், ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய அணிக்கு தலைமை தாங்கி தங்கப்பதக்கத்தை வென்று கொடுத்தார். அதனைத் தொடர்ந்து அவர் சென்னை அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜாம்பவான் தோனியின் இடத்தில சென்னை அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ருதுராஜ் கெய்க்வாட் தற்போது செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார். எனினும் சில இடங்களில் அவர் தோனியிடம் அடிக்கடி ஆலோசனை கேட்டும் செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில், என்னிடம் ஆலோசனை கேட்க வேண்டாம் என ருத்துராஜிடம் தோனி கூறியதாக முன்னாள் சென்னை அணி வீரர் பத்ரிநாத் கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், " லக்னோ அணிக்கு எதிரான போட்டியின் போது பௌலிங் மாற்றம், பீல்டிங் மாற்றம் குறித்த ஆலோசனைகளை ருத்துராஜ் தோனியிடம் கேட்டுள்ளார்.
அப்போது ஆலோசனை கொடுத்த தோனி, பந்துவீச்சாளர்கள் மாற்றம் மற்றும், பீல்டர்கள் நிறுத்துவது குறித்து விவாதித்துள்ளார் எனினும் அதன் பின்னர் அடுத்து வரும் போட்டிகளில் என்னிடம் இது போன்ற ஆலோசனை கேட்க வேண்டாம்" என கூறியதாக பத்ரிநாத் கூறியுள்ளார்.
Also Read
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !
-
”மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - ஒருமைப்பாட்டை வலிமைப்படுத்தும்” : முதலமைச்சர் பேச்சு!