Sports
இந்திய அணியின் அடுத்த கேப்டன் இவர்தான் - சுரேஷ் ரெய்னா கைகாட்டிய அந்த வீரர் யார் ?
கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற யு-19 போட்டியில் சிறப்பான செயல்பட்ட இளம்வீரர் சுப்மான் கில் அனைவரையும் கவர்ந்தார். அதனைத் தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடிவந்த கில் கடந்த 2019-ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான தொடர் மூலம் இந்திய அணிக்காக அறிமுகம் ஆனார்.
அதன் பின்னர் தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் அணியில் தனது இடத்தை தக்கவைத்த கில், மூன்று விதமான கிரிக்கெட் தொடரிலும் இந்தியாவின் தவிர்க்கமுடியாத வீரராக மாறியுள்ளார். அதிலும் கடந்த ஜனவரி மாதம் நியூசிலாந்துக்கு அணிக்கு எதிரான போட்டியில் 200 ரன்கள் குவித்து சாதனை படைத்ததோடு, அதே மாதம் டி20 போட்டியிலும் சதம் விளாசி இளம்வயதில் மூன்று விதமான போட்டிகளிலும் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.
தற்போது முடிவடைந்த உலகக்கோப்பை தொடரிலும் சிறப்பாக செயல்பட்ட அவர், முதல் முறையாக ஐசிசி ஒருநாள் போட்டி பேட்ஸ்மேன் தரவரிசையில் முதலிடம் பிடித்து அசத்தினார். அதோடு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாகவும் சுப்மான் கில் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், இந்திய அணியின் அடுத்த கேப்டன் சுப்மான் கில்தான் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.
இது குறித்துப் பேசிய அவர், "இந்திய அணியின் அடுத்த கேப்டன் போட்டியில் நிறைய வீரர்கள் இருக்கிறார்கள். ஆனால், என்னை பொறுத்தவரை சுப்மன் கில்லுக்கு அதிக வாய்ப்பு உள்ளது.ஏனெனில் சுப்மன் கில் கேப்டனாக நன்றாக செயல்படுவது மட்டுமின்றி பேட்டிங்கிலும் அதிரடி காட்டி வருகிறார்.
தற்போது 23 வயதான அவர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் வேளையில் அடுத்ததாக நீண்ட ஒரு கேப்டன் பயணத்திற்கான தேர்வாக அவர் சரியாக இருப்பார். இதனால் என்பதால் அவரே அடுத்த இந்திய அணியின் அடுத்த கேப்டனாக இருக்க அதிக வாய்ப்புள்ளது"என்று கூறியுள்ளார்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!