Sports
"இந்தியர்கள் எங்களின் மீது அன்பை பொழிந்தனர், இதை எதிர்பார்க்கவில்லை"- பாக். கேப்டன் நெகிழ்ச்சி !
2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி முதல் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக தோல்வியைத் தழுவியது. தொடர்ந்து லீக் சுற்றிலும் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்து. இதனால் அந்த அணி அரையிறுதிக்கு செல்லாமல் லீக் சுற்றோடு தொடரில் இருந்து வெளியேறியது.
இந்த தொடரின் குஜராத்தில் நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில், மதரீதியாக பாகிஸ்தான் வீரர்களை குஜராத் ரசிகர்கள் கிண்டல் செய்திருந்தனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு இந்திய ரசிகர்கள் #Sorrypakistan என்ற ஹாஸ்டாக்கில் குஜராத் ரசிகர்களின் செயலுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.
தொடர்ந்து ஹைதராபாத் மற்றும் சென்னையில் ஆடிய போட்டிகளில் பாகிஸ்தான் வீரர்களும் பெரும் வரவேற்பும், ஆதரவும் கிடைத்தது. இந்த நிலையில், இந்தியர்கள் எங்களின் மீது அன்பைப் பொழிந்து எங்களை பாராட்டினார்கள் என பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் கூறியுள்ளார்.
இது குறித்துப் பேசிய அவர், "நான் முதல் முறையாக இந்தியாவிற்கு உலகக்கோப்பையில் போதுதான் சென்றிருந்தேன். எனக்கு இந்தியாவைப் பற்றி எந்தப் புரிதலும் இல்லை. இந்தியாவும் பாகிஸ்தானும் மோதிய போட்டியின் போது மைதானமே நீல நிறக் கடல் போலக் காட்சியளித்தது.இந்தியாவில் வைத்து இந்தியாவை சந்தித்தால் இதுதான் நடக்கும் என்பது தெரியும்.
ஆனால், மற்ற மைதானங்களில் எங்களுக்கும் நல்ல வரவேற்பு இருந்ததை நான் எதிர்பார்க்கவே இல்லை.அது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. இந்தியர்கள் எங்களின் மீது அன்பைப் பொழிந்து எங்களை பாராட்டினார்கள்" என்று கூறியுள்ளார்.
Also Read
-
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் : ஆடவர் டி20 கிரிக்கெட்டில் தங்கம் வென்ற இந்தியா.. பந்தாடப்பட்ட பாகிஸ்தான்!
-
தொடர் அட்ராசிட்டி... கிராம சபைக் கூட்டத்தை நடத்திய தவெக நிர்வாகிகள்.. சேலத்தில் அதிர்ச்சி! | VIDEO
-
Chief Minister விஜய் - Cheap Minister : தாராபுரத்தில் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அனல் பேச்சு!
-
“வெற்றிப் பயணம் திட்டதிலும் த.வெ.க அரசின் பித்தலாட்டம்” : பெண்களிடம் கட்டணம் வசூல்!
-
“தவெக அரசு இதோடு தனது கொட்டத்தை அடக்கிக்கொள்ள வேண்டும்” : இந்தி திணிப்பு - தி.மு.க ஐடி விங் எச்சரிக்கை!