Sports
தொடர் தோல்வி: கேப்டன் பொறுப்பிலிருந்து தூக்கியெறியப்பட்ட ஷாஹீன் அப்ரிடி... மீண்டும் கேப்டனான பாபர் அசாம்!
2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றில் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்து. இதனால் அந்த அணி அரையிறுதிக்கு செல்லாமல் லீக் சுற்றோடு தொடரில் இருந்து வெளியேறியது.இந்த தொடரில் பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு அந்த அணியின் கேப்டன் பாபர் அசாமே காரணம் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
மேலும், கடந்த டி20 உலகக்கோப்பையிலும் பாகிஸ்தான் அணியின் செயல்பாடு விமர்சிக்கப்பட்டது. அதோடு கடந்த உலகக்கோப்பை தொடரிலும் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு செல்லாமல் வெளியேறியது. சமீபத்தில் முடிவடைந்த ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணியால் இறுதிப்போட்டிக்கு கூட தகுதிபெறமுடியவில்லை.
இதன் காரணமாக கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக பாபர் அசாம் அறிவித்தார். பின்னர் அவர் இடத்தில் டெஸ்ட் கேப்டனாக ஷான் மசூத், டி20 கேப்டனாக ஷாகின் அப்ரிடி உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து நியூஸிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் கேப்டனாக ஷாகின் அப்ரிடி மோசமாக செயல்பட்டார். அந்த தொடரை பாகிஸ்தான் அணி 4-1 என்ற கணக்கில் இழந்தது.
அதோடு எஸ்எல் தொடரில் ஷாஹீன் அப்ரிடி தலைமையிலான லாகூர் பிளே ஆஃப் சுற்றுக்கு கூட பெறாமல் வெளியேறியது. இதன் காரணமாக பாகிஸ்தான் அணியின் டி20 கேப்டன்ஷிப் பதவியிலிருந்து ஷாஹீன் அப்ரிடி நீக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு பதிலாக பாபர் அசாம் மீண்டும் ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
பாகிஸ்தானில் நியூசிலாந்துக்கு எதிராக தொடரில் இருந்து பாபர் அசாம் கேப்டனாக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்து மேற்கிந்திய தீவுகள், அமெரிக்காவில் நடைபெறும் உலகக்கோப்பை டி20 தொடருக்கும் பாபர் அசாம் கேப்டனாக தொடருவார் என்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.
Also Read
-
அடுத்தடுத்து ராஜினாமா செய்த அதிமுக MLA-க்கள்... இடைத்தேர்தல் நடத்த தடை விதித்த நீதிமன்றம் - விவரம்!
-
‘முதலமைச்சர் விஜயின் பேச்சை ஒளிபரப்பி அராஜகம்.. பள்ளி அறிவை வளர்க்க.. அரசியல் புகழ்பாட அல்ல’: DMK IT Wing
-
கரூர் துயரம் : “இன்னும் திருத்தல...” - இறப்பில் இன்றளவும் மலிவு அரசியல் செய்யும் விஜய்!
-
“அன்று ஓடிப்போனவர், இன்று பேசலாமா? இப்படி ஒரு அரசியல் தேவையா விஜய் சார்?” : டி.கே.எஸ் இளங்கோவன் கண்டனம்!
-
மாற்றம் என்று தவெகவினர் கூறியது : மகளிர் விடியல் பயணம் திட்டத்தின் பெயர் மாற்றத்திற்கு கீதாஜீவன் கண்டனம்!