Sports
2024 டி20 உலகக் கோப்பை தொடரில் விராட் கோலியை நீக்க திட்டம் - வெளியான தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி!
இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது. அதனைத் தொடர்ந்து டி20 உலகக்கோப்பை நடைபெறும் நிலையில், அந்த தொடருக்கு சீனியர் வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா இடம்பெறுவார்களா என்ற கேள்வி எழுந்தது.
உலகக்கோப்பை தொடருக்கு பின்னர் நடைபெற்ற தென்னாபிரிக்க அணிக்கு எதிரான தொடரில் கூட இளம்வீரர்கள் அடங்கிய இந்திய அணியே பங்கேற்றது. இதனால் இந்திய அணியில் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மாவின் டி20 பயணம் முடிவுக்கு வந்ததாக கூறப்பட்டது.
ஆனால், அவர்களின் டி20 பயணம் குறித்து அவர்களே முடிவே செய்துகொள்ளலாம் என பிசிசிஐ சார்பில் கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் இந்த இருவரும் அணியில் இடம்பிடித்தனர். இதனால் அடுத்த உலகக்கோப்பை தொடரிலும் அவர்கள் இடம்பெறுவர் என்பது ஏறக்குறைய உறுதியானதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் விராட் கோலியை நீக்க தேர்வுக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் வரும் ஜூன் மாதம் 2024 டி20 உலகக் கோப்பை நடைபெற உள்ளது.
இங்குள்ள மைதானத்தில் பந்துகள் மெதுவாக பேட்ஸ்மேனை நோக்கி வரும். மேலும், சுழற்பந்துக்கும் இங்குள்ள மைதானங்கள் அதிகமாக ஒத்துழைக்கும். இது போன்ற மைதானங்களில் விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக உள்ளதால், இந்த தொடருக்கு விராட் கோலியை நீக்க அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும், இந்த தொடரில் இளம்வீரர்களுக்கு அதிக அளவில் வாய்ப்பளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Also Read
-
2 கட்டங்களாக நடைபெறும் பீகார் சட்டமன்றத் தேர்தல்... தேர்தல் ஆணையம் அறிவிப்பு !
-
தீபாவளி பண்டிகை : தமிழ்நாடு முழுவதும் சிறப்பு பேருந்துகள் உள்ளிட்ட 20,378 பேருந்துகள் இயக்க முடிவு !
-
BB SEASON 9 : "ஒரு நாள் மேல தாங்க மாட்டாரு?" - Watermelon திவாகரை டார்கெட் செய்யும் சக போட்டியாளர்கள்!
-
"தலைமை நீதிபதி மீதான தாக்குதல் சமூகத்தின் ஆதிக்க மனப்பான்மையை காட்டுகிறது" - முதலமைச்சர் கண்டனம் !
-
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை நோக்கி செருப்பு வீச்சு... பின்னணியில் சனாதனம் - முழு விவரம் உள்ளே !