Sports
"ரோகித் சர்மா அதிகம் கண்டுகொள்ளப்படவில்லை"- முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் இயன் சேப்பல் கூறியது என்ன ?
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி இந்திய அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வென்ற நிலையில், அடுத்த போட்டியில் இந்தியா வென்று தொடரை 1-1 என சமன் செய்தது.
தொடர்ந்து மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியை 434 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றிபெற்றது. இதையடுத்து ராஞ்சியில் நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இங்கிலாந்து அணியில் மெக்கல்லம்-ஸ்டோக்ஸ் இணை பொறுப்பேற்று bazball முறையில் அந்த ஆடி வந்தது.இது பெரும் வெற்றிகரமாக வலம்வந்த நிலையில், அதற்கு இந்திய அணி முற்றுப்புள்ளி வைத்தது.
இந்த தொடரில் கேப்டன் ரோஹித் சர்மாவின் கேப்டன்சி வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஒரு கேப்டனாக ரோகித் சர்மா அதிகம் கண்டுகொள்ளப்படவில்லை என்று முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் இயன் சேப்பல் கூறியுள்ளார் .
இது குறித்துப் பேசிய அவர், "இளம் வீரர்களை வைத்துக்கொண்டு ரோகித் சர்மா அணியை சிறப்பாக வழி நடத்தி வெற்றியை பெற்றிருக்கிறார். பேட்ஸ்மேனாக ரோகித் சர்மாவை நாம் பாராட்டுகிறோம். ஆனால், ஒரு கேப்டனாக அவரை நாம் அதிகம் கண்டு கொள்வதில்லை. அவர் அமைதியாக இருந்து பல அதிரடி காரியங்களை சாதித்து வருகிறார்.
முதல் டெஸ்ட் போட்டியில் அடைந்த தோல்விக்கு பிறகு அவர் அணியை மீட்டு வந்து வெற்றி பெற வைத்தது பாராட்டத்தக்கது. இந்த தொடரில் அவரின் கேப்டன்சி சரியில்லாமல் இருந்திருந்தா நிச்சயம் இந்திய அணி தோல்வியை சந்தித்திருக்கும். மூத்த வீரர்கள் இல்லாத, அனுபவம் இல்லாத அணிக்கு, ரோகித் சர்மா கேப்டனாக நம்பிக்கை கொடுத்து அணியை வெற்றி பெற வைத்திருக்கிறார்"என்று கூறியுள்ளார்.
Also Read
-
2,429 பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் நாளை விரிவாக்கம் : 3.6 லட்சம் மாணவர்கள் பயன்!
-
முதலமைச்சரின் உதவி மையம் : திடீரென ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
TNPSC Group 1 : 89 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
19 புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் : திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“சென்னை இதழியல் நிறுவனம்!” : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!