Sports
"சதம் அடித்தும் என்னை அணியில் ஏன் நீக்கினார் என தோனியிடம் கேட்கவிரும்புகிறேன்" - மனோஜ் திவாரி கருத்து !
மேற்கு வங்கத்தை சேர்ந்த மனோஜ் திவாரி உள்நாட்டு தொடர்களில் சிறப்பாக ஆடியதால் கடந்த 2008-ல் இந்திய அணிக்கு இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். 12 ஒருநாள் போட்டிகளிலும், 3 இருவது ஓவர் போட்டியிலும் இந்தியாவுக்கு ஆடிய அவர் பிறகு இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வந்தார்.
அதிலும், சர்வதேச போட்டியில் சதம் அடித்த பிறகும் வாய்ப்பே கொடுக்காமல் அடுத்த போட்டியிலே அவர் புறக்கணிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன் பிறகு இந்திய அணிக்கு திருப்பிய அவர் மீண்டும் அணியில் இடம் கிடைக்காமல் புறக்கணிக்கப்பட்டார்.
பின்னர் உள்நாட்டு தொடர்களில் ஆடிய அவர் அங்கும் சிறப்பாகவே செயல்பட்டார். ஆனாலும் பி.சி.சி.ஐ அவருக்கு வாய்ப்புகள் வழங்கவில்லை. இதன் காரணமாக ரஞ்சி தொடரில் மேற்கு வங்க அணி கேப்டனாக செயல்பட்டு வந்தார். அதோடு தேர்தலில் வென்று, மம்தா பானர்ஜின் அமைச்சரவையில் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அமைச்சராகவும் செயல்பட்டார். அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், சதம் அடித்தும் தன்னை அடுத்த போட்டியிலேயே அணியில் இருந்து நீக்கியது ஏன் என்று அப்போதைய கேப்டன் தோனியை நோக்கி மனோஜ் திவாரி கேள்வி எழுப்பியுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர், " கடந்த 2011 ஆம் ஆண்டு ஒரு போட்டியில் சதம் அடித்த பிறகும் அடுத்த போட்டியிலேயே என்னை ஏன் அணியில் இருந்து தோனி நீக்கினார் என்று தற்போது அவரிடம் கேட்க நான் ஆசைப்படுகிறேன்.
ரோகித் சர்மா, விராட் கோலி போல எனக்கு வாய்ப்பு கிடைத்திருந்தால் நானும் ஒரு நட்சத்திர வீரராக ஆகியிருப்பேன். அந்த அளவுக்கு என்னிடம் திறமை இருந்தது. தற்போது பல இளைஞர்கள் வாய்ப்பு கிடைத்து ஜொலித்து வருகிறார்கள். அதைப் பார்க்கும்போது எனக்கு வருத்தமாக இருக்கிறது. இப்போது நான் பி சி சி ஐ குறித்து ஏதேனும் கருத்து தெரிவித்தால் எனக்கு தடை விதிக்க வாய்ப்பு இருக்கிறது. தற்போது அரசியல்வாதிகளின் ஆதிக்கம் தான் பிசிசிஐயில் இருக்கிறது" என்று கூறியுள்ளார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!