Sports
ஆப்பிரிக்க கோப்பை கால்பந்து : நைஜீரியா அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது ஐவரி கோஸ்ட் !
ஆப்பிரிக்க கோப்பை கால்பந்து தொடர் ஐவரி கோஸ்ட் நாட்டில் நடைபெற்றது. இந்த தொடரில் 24 நாடுகள் பங்கேற்றன. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த தொடரின் அரையிறுதிக்கு நைஜீரியா, தென்னாப்பிரிக்கா, ஐவரி கோஸ்ட் மற்றும் காங்கோ ஆகிய நாடுகள் முன்னேறின.
ஃபிபா தரவரிசையில் உயந்த இடத்தில் இருக்கும் ஆப்ரிக்க அணியும், உலகக்கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறிய அணியான மொராக்கோ அணி இந்த கோப்பையை வெல்லும் என ஆரம்பத்தில் கணிக்கப்பட்டது. ஆனால், அந்த அணி தென்னாபிரிக்க அணியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறியது.
அதே போல பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட எகிப்து அணியும் காங்கோ அணியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது. அரையிறுதியில் நைஜீரியா அணி, தென்னாப்பிரிக்காவை பெனால்டி முறையில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
மற்றொரு அரையிறுதிப் போட்டியில், ஐவரி கோஸ்ட் அணி காங்கோ அணியை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அதனைத் தொடர்ந்து மூன்றாம் இடத்துக்கான போட்டியில் தென்னாப்பிரிக்க அணி பெனால்டி முறையில் காங்கோ அணியை வீழ்த்தி மூன்றாம் இடம் பிடித்தது.
இந்த நிலையில், நேற்று இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் நைஜீரியா அணியை 1-2 என்ற கணக்கில் வீழ்த்தி ஐவரி கோஸ்ட் அணி ஆப்ரிக்க கோப்பையை கைப்பற்றியது. இதன் மூலம் மூன்றாவது முறையாக ஐவரி கோஸ்ட் அணி ஆப்ரிக்க கோப்பையை வென்றுள்ளது.
Also Read
-
ரூ.74.70 கோடியில் சென்னை மாநகராட்சியின் புதிய மன்றக்கூடம் : அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
-
சென்னையின் கலாச்சாரச் சின்னம் : புனரமைக்கப்பட்ட விக்டோரியா பொது அரங்கத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“எந்த பாசிச சக்திகளாலும் ஒன்றும் செய்ய முடியாது” : கிறிஸ்துமஸ் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“எங்களுக்கு யாரைக் கண்டும் எந்த பயமும் கிடையாது” : கனிமொழி எம்.பி அதிரடி!
-
“திராவிட மாடலின் சாதனைகள் தொடரும்; உழவர் வாழ்வு செழிக்கும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!