Sports
AFC ஆசிய கோப்பை கால்பந்து : தொடர்ந்து இரண்டாம் முறையாக கோப்பையை வென்றது கத்தார்.. இந்தியாவின் நிலை என்ன ?
AFC ஆசிய கோப்பை கால்பந்து தொடர் கடந்த 12-ம் தேதி கத்தாரில் கோலாகலமாக தொடங்கியது. இந்த தொடரில் மொத்தம் 24 அணிகள் பங்கேற்றிருந்தன. இதில் இந்தியா குரூப் B பிரிவில் இடம்பெற்றிருந்த நிலையில், 3 போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி தொடரில் இருந்து வெளியேறியது.
இந்த தொடரில் வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளதாக கருதப்பட்ட ஜப்பான் அணி காலிறுதிப் போட்டியில் ஈரான் அணியிடம் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறியது. அதேபோல முன்னாள் சாம்பியன் ஆஸ்திரேலிய அணியும் காலிறுதியில் வெளியேறியது.
அரையிறுதியில் ஜோர்தான் அணி தென்கொரிய அணியை வீழ்த்தி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேற, மற்றொரு அரையிறுதிப்போட்டியில் போட்டியை நடத்தும் கத்தார் அணி ஈரானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இறுதிப்போட்டி நேற்று இரவு நடைபெற்ற நிலையில், அதில் கத்தார் அணி 3-1 என்ற கணக்கில் ஜோர்தான் அணியை வீழ்த்தி தொடர்ந்து இரண்டாம் முறையாக ஆசிய கோப்பையை கைப்பற்றியது. கடந்த முறை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பையையும் கத்தார் வென்றிருந்தது.
வெறும் 27 லட்சம் மக்கள் தொகை கொண்ட கத்தார் அணி, ஆசியாவின் முன்னணி அணிகளை வீழ்த்தி ஆசியக்கோப்பையை தொடர்ந்து இரண்டாம் முறையாக வென்று உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதே போல சர்வதேச கால்பந்து அரங்கில் 87-வது இடத்தில் உள்ள ஜோர்தான் அணி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!