Sports

கோபத்தில் சேவாக்கின் சட்டையை பிடித்து இழுத்த முன்னாள் பயிற்சியாளர் - BCCI துணை தலைவர் கூறியது என்ன !

நவீன இந்திய அணியை கட்டமைத்தவர் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலியை குறிப்பிடுவார்கள். அவர் கண்டெடுத்து இந்திய அணியில் அறிமுகப்படுத்திய சேவாக், யுவராஜ், தோனி,ஹர்பஜன் போன்ற வீரர்கள்தான் இந்திய அணியை அடுத்த கட்டத்துக்கு கொண்டுசெல்ல வைத்தனர்.

அதிலும் கங்குலியால் கண்டெடுக்கப்பட்ட முத்து என அதிரடி வீரர் வீரேந்திர சேவாக்கை சொல்லலாம். விவியன் ரிச்சர்ட் போல ஒரு ஆட்டக்காரர் நமக்கு கிடக்கமாட்டாரா என ஏங்கிக்கொண்டிருந்தபோது வந்தவர்தான் சேவாக். டெஸ்ட் போட்டிகளை கூட டி20 போல விறுவிறுப்பாகிய பெருமை சேவாக்குக்கு மட்டுமே உண்டு.

சச்சினுக்கே எட்டாக்கனியாக இருந்த டெஸ்ட் முச்சதத்தை இருமுறை எட்டி முச்சதம் அடித்த முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்தார். அதோடு ஒருநாள் போட்டிகளில் சச்சினுக்கு பின்னர் இரட்டை சதத்தை அடித்த இரண்டாவது இந்தியர் என்ற சாதனையையும் படைத்தார். ஒருநாள் போட்டிகளில் சச்சின்-சேவாக் இணையை கண்டு உலகமே பயந்து நடுங்கிய காலம் ஒன்றும் இருந்தது.

Rajiv Shukla

இந்த நிலையில், முன்னாள் பயிற்சியாளர் ஜான் ரைட் கோவத்தில் சேவாக்கின் சட்டையை பிடித்து இழுத்தார் என்று பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், "2004 ஆம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் சேவாக் குறைந்த ரன்னில் அவுட் ஆகி வீரர்கள் அறைக்கு வந்தார்.

இஇதனால் சேவாக் மேல் அப்போதைய இந்திய அணி பயிற்சியாளர் ஜான் ரைட் அவர் மேல் கோவமடைந்து சேவாக்கின் சட்டையை பிடித்து அவர் இழுத்தார். எனினும் அந்த தருணத்தை சேவாக் கவனமாக கையாண்டு அதனை பெரிதுபடுத்தவில்லை" என்று கூறியுள்ளார்.

Also Read: "பேட்ஸ்மேனாக அஸ்வின் அணிக்கு என்ன செய்வார்"- தன்னை விட அதிக டெஸ்ட் சதங்கள் விளாசியவரை விமர்சித்த யுவராஜ்!