Sports
பஞ்சாப் : நடுரோட்டில் சுட்டுக்கொல்லப்பட்ட அர்ஜுனா விருது பெற்ற பளுதூக்கும் வீரர்.. ஆட்டோ ஓட்டுநர் கைது !
பஞ்சாபை சேர்ந்தவர் டல்பீர் சிங் தியோல். இவர் பளுதூக்கும் வீரராக இந்தியா சார்பில் பல்வேறு போட்டிகளில் பங்குபெற்று பதக்கங்களை வென்றுள்ளார். இதன் காரணமாய் இவருக்கு இந்திய அரசு அர்ஜுனா விருது வழங்கி கௌரவித்துள்ளது.
விளையாட்டு வீரரான இவர் தற்போது பஞ்சாப் காவல்துறை அதிகாரியாக பணிபுரிகிறார். இந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்னர் இவர் தனது வீட்டுக்கு செல்ல ஒரு ஷேர் ஆட்டோவை நிறுத்தியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறிய நிலையில், ஆட்டோ ஓட்டுநர் டல்பீர் சிங் தியோலிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து அவரின் தலையில் சுட்டுள்ளார். இதில் தலையில் குண்டு பாய்ந்த நிலையில், கவலைதரும் அதிகாரி டல்பீர் சிங் தியோல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். அதன் பின்னர் அந்த வழியே வந்த காவலர் ஒருவர் சக காவலர் ஒருவர் உயிரிழந்து கிடப்பது குறித்து காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அங்கு வந்து சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலிஸார், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அந்த ஷேர் ஆட்டோ ஓட்டுனரை கைது செய்தனர். தொடர்ந்து அந்த ஆட்டோ ஓட்டுநர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பஞ்சாபில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
சென்னையில் மின்சாரப் பேருந்து பணிமனை: துணை முதலமைச்சர் தொடங்கி வைத்த மின்சார பேருந்துகளின் சிறப்புகள்!
-
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்க்க தடை விதித்த சென்னை மாநகராட்சி : காரணம் என்ன?
-
VBGRAMG சட்டம் ஒழிக! : ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் அறிவித்த மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி!
-
“பாசிஸ்ட்டுகளின் வஞ்சக சூழ்ச்சி தமிழ்நாட்டில் எடுபடாது” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
நேஷனல் ஹெரால்டு வழக்கு : பா.ஜ.கவின் ஆணவத்துக்கு அடி கொடுத்த நீதிமன்றம் - முரசொலி!