Sports
ஒன்றரை நாளில் முடிந்த போட்டி: தென்னாபிரிக்காவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி- மோசமான சாதனை படைத்த மைதானம்!
உலகக்கோப்பைத் தொடரின் தோல்வியைத் தொடர்ந்து இந்திய அணி தற்போது தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்து அங்கு டி20, ஒருநாள் , டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இதில் இதில் டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்த நிலையில், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி சென்சூரியன் நகரில் நடைபெற்றது. இதில் மோசமாக ஆடிய இந்திய அணி மூன்றே நாளில் இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. விராட் கோலி, கே.எல்.ராகுல், பும்ரா மட்டுமே அணிக்கு பங்களிப்பு அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து கேப் டவுனில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் ஆடிய தென்னாபிரிக்க அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 55 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. பின்னர் ஆடிய இந்திய அணி 153 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிலும் கடைசி 6 விக்கெட்டுகளை ஒரு ரன் கூட எடுக்காமல் இழந்தது.
பின்னர் 2-வது இன்னிங்க்ஸை ஆடிய தென்னாபிரிக்க அணி 176 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணியின் வெற்றிக்கு 78 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து ஆடிய இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாத்தில் அபார வெற்றி பெற்றது.
இதன் மூலம் 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. கேப் டவுனில் நடைபெற்ற இரண்டாவது போட்டி, ஒன்றரை நாளில் முடிந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த போட்டியில் 4 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 642 பந்துகள் மட்டுமே வீசப்பட்டுள்ளது.
இதன் மூலம் வரலாற்றில் குறைவான நேரத்தில் முடிந்த போட்டி என்னும் மோசமான சாதனையை படைத்துள்ளது. முன்னதாக 1932-ம் ஆண்டு மெல்போர்னில் நடந்த ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோதிய போட்டி 656 பந்துகளில் முடிந்ததே சாதனையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்த ஒன்றிய பாஜக அரசு - முதலமைச்சர் கண்டனம் !
-
நிர்மலா சீதாராமனுக்கு இது புரியாது, ஏனெனில் அவருக்கு புரிந்துகொள்ளும் தன்மை இல்லை - முரசொலி விமர்சனம் !
-
TNPSC குரூப் 2, 2ஏ-வில் 1270 காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு : முழு விவரம் இதோ!
-
மெட்ரோ திட்டத்திலும் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு : DMK IT WING கண்டனம்!
-
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு அனுமதி மறுப்பு : தொடரும் ஒன்றிய அரசின் வஞ்சகம்!