Sports
கோலி மட்டும் கேப்டனாக இருந்தால் அவருக்கு வாய்ப்பே அளித்திருக்க மாட்டார் - சஞ்சய் மஞ்சரேக்கர் விமர்சனம் !
உலகக்கோப்பைத் தொடரின் தோல்வியைத் தொடர்ந்து இந்திய அணி தற்போது தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்த நிலையில், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி சென்சூரியன் நகரில் நடைபெற்றது. இதில் மோசமாக ஆடிய இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. விராட் கோலி, கே.எல்.ராகுல், பும்ரா மட்டுமே அணிக்கு பங்களிப்பு அளித்தனர்.
எனினும் மூன்றே நாளில் இந்திய அணி படுதோல்வி அடைந்ததை பல்வேறு முன்னாள் வீரர்களும் விமர்சித்து வருகின்றனர். இந்த போட்டியில் பிரசித் கிருஷ்ணா அறிமுக வீரராக களமிறங்கிய நிலையில், அவர் மோசமாக செயல்பட்டார். அவரும் ஷர்துல் தாக்கூர் இருவரும் இணைந்து 39 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தி 194 ரன்கள் விட்டுக்கொடுத்தனர்.
அதே நேரம் பும்ரா, சிராஜ் மற்றும் அஸ்வின் ஆகியோர் 201 ரன்களை விட்டுக் கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதில், ஷர்துல் தாக்கூர் பேட்டிங்கில் பங்களிப்பு அளிக்கும் நிலையில், பிரசித் கிருஷ்ணா அணியில் தேர்வு செய்யப்பட்டதை பலரும் விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கோலி கேப்டனாக இருந்தால் பிரசித் கிருஷ்ணாவுக்கு அணியில் வாய்ப்பு கிடைத்திருக்காது என முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், "டெஸ்ட் அணியின் கேப்டனாக விராட் கோலியும், பயிற்சியாளராக ரவி சாஸ்திரியும் இருந்திருந்தால், நிச்சயம் பிரசித் கிருஷ்ணாவுக்கு அணியில் வாய்ப்பு கிடைத்து இருக்காது.
ஆனால் ராகுல் டிராவிட் மற்றும் ரோகித் சர்மா இருவரும் பிரசித் கிருஷ்ணாவுக்கு மற்றொரு வாய்ப்பை அளித்தாலும் அளிப்பார்கள். ஷர்துல் தாக்கூர் பேட்டிங் செய்வார் என்பதால் நிச்சயம் பிளேயிங் லெவனில் தொடர்வார். ஆனால், பிரசித் கிருஷ்ணா அணியில் எதற்கு ? 2வது டெஸ்ட் போட்டியில் முகேஷ் குமார் விளையாடினால் ரசிகர்களிடையே விமர்சனங்கள் வராது. அவர் பந்துவீச்சை ரசிகர்கள் ஏற்கனவே போதிய அளவில் பார்த்திருக்கிறார்கள்"என்று கூறியுள்ளார்.
Also Read
-
தமிழ்நாடு அரசின் திட்டத்திற்கு தடை விதிக்க முடியாது : சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு என்ன?
-
அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயர் சோரான் மம்தானி - புறக்கணிக்க முடியாத வெற்றி!
-
“அதிமுகவிற்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாததால் S.I.R - ஐ ஆதரிக்கிறார்கள்!” : என்.ஆர்.இளங்கோ கண்டனம்!
-
பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் : அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
திருக்கோயில் பயிற்சி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை உயர்வு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!