Sports
’விருதை திருடிவிட்டேன்’ : ஜடேஜாவிடம் மன்னிப்பு கேட்ட விராட் கோலி - காரணம் என்ன?
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. இந்த தொடரில் தொடர்ந்து அபாரமாக ஆடிவரும் இந்திய அணி இன்று புனேவில் நடைபெற்ற ஆட்டத்தில் வங்கதேச அணியை சந்தித்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அதன்படி பேட்டிங் ஆடிய அந்த அணியின் தொடக்க வீரர்கள் டான்ஸிட் ஹசன் , லிட்டன் தாஸ் ஆகியோர் சிறப்பாக தொடக்கத்தை வழங்கினர். 93 ரன்கள் குவித்திருந்தபோது இந்த ஜோடி பிரிந்தது. பின்னர் அடுத்து வந்த வீரர்களும் சீரான இடைவெளியில் தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
இதனால், நல்ல தொடக்கத்தை பெற்ற வங்கதேச அணி இறுதியில் 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் குவித்தது. இந்திய தரப்பில் பும்ரா, சிராஜ், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், தாகூர், குல்தீப் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் 257 ரன்களை இலக்காக கொண்டு இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோஹித் சர்மா, கில் ஜோடி வங்கதேச பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து. ரோஹித் சர்மா 48 ரன்களுக்கும், கில் 53 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
பின்னர் ஜோடி சேர்ந்த கோலி, கே.எல்.ராகுல் இணை தங்கள் விக்கெட்டை இழக்காமல் சிறப்பாக ஆடினர். இறுதியில் விராட் கோலி சிக்ஸர் விளாசி சதம் விளாசியதோடு , அணியை வெற்றிபெற வைத்தார். இதனால் இந்திய அணி, 41.3 ஓவர்களில் இலக்கை எட்டி அபார வெற்றிபெற்றது.
இதையடுத்து விராட் கோலிக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. அப்போது பேசிய கோலி, ஆட்ட நாயகன் விருதை ஜடேஜாவிடம் இருந்து திருடியதற்கான மன்னிப்பு கேட்கிறேன். அணிக்கு மிகப்பெரிய பங்களிப்பை கொடுக்க விரும்பினேன். இந்த உலக கோப்பை தொடரில் இரண்டு அரைசதம் அடித்தேன். ஆனால் அதைச் சதமாக மாற்ற முடியவில்லை. இப்போட்டியில் கடைசி வரை நின்று முடிக்க விரும்பினேன். அதனால் ரன்கள் அடிக்க முடிந்தது" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!