Sports
உலகக்கோப்பை INDvsPAK : குஜராத் ரசிகர்களால் தலைகுனிந்த இந்தியா.. ட்ரெண்டிங்கில் இருக்கும் #Sorry_Pakistan!
இந்தியாவில் 2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 5-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் சந்தித்தன. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த போட்டி, குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் அமைந்திருக்கும் 'நரேந்திர மோடி ஸ்டேடியத்தில்' நடைபெற்றது.
இதில் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 191 ரன்கள் எடுத்தது. இதனால் 192 ரன்கள் வெற்றி இலக்கை குறி வைத்து இந்திய அணி பேட்டிங் செய்தது. இந்திய வீரர்களின் ஆட்டத்தால், இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தானுடன் மோதி, இந்தியா வென்றதற்கு பலரும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வரும் நிலையில், பாகிஸ்தான் வீரரிடம் இந்திய ரசிகர்கள் மோசமாக நடந்துகொண்ட வீடியோ வெளியாகி பலர் மத்தியிலும் கண்டனங்களை எழுப்பி வருகிறது.
இந்த ஆட்டத்தின்போது பாகிஸ்தான் பேட்டிங் செய்துகொண்டிருந்த சமயத்தில், பாக். அணி வீரரான முகமது ரிஸ்வான் தனது விக்கெட்டை இழந்து, பெவிலியன் நோக்கி திரும்பி சென்றுகொண்டிருந்தார். அப்போது ஸ்டேடியத்தில் இருந்த இந்திய ரசிகர்கள் சிலர், ரிஸ்வானை நோக்கி, "ஜெய் ஸ்ரீ ராம்.. ஜெய் ஸ்ரீ ராம்.." என்று கோஷங்களை எழுப்பினர்.
இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பலர் மத்தியிலும் கண்டனங்களை எழுப்பி வருகிறது. இந்தியாவில் போட்டிக்கு வரும் மற்ற நாட்டு வீரர்களை இதுபோல் அவமரியாதையாக நடத்தக்கூடாது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இணையத்தில் #Sorry_Pakistan என்ற ஹேஸ்டாக் ட்ரெண்டாகி வருகிறது.
மேலும் 1999-ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில் இறுதி கட்டத்தில் சச்சின் ஆட்டமிழந்ததால் இந்திய அணி தோல்வியுற்றது. இதனால் பெரும் ஆரவாரத்தில் இருந்த இந்திய ரசிகர்கள் பெரும் சோகத்தில் இருந்தாலும், பாகிஸ்தானின் வெற்றியை கொண்டாடும் விதமாக கரகோஷம் எழுப்பினர்.
ரசிகர்களிடம் இருந்து எழுந்த கரகோஷங்களை பாகிஸ்தான் வீரர்கள் நெகிழ்ச்சியுடன் மைதானத்தை வலம் வந்து ஏற்றுக்கொண்டனர். இந்த நெகிழ்ச்சி நிகழ்வு குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி 'இதுதான் தமிழன் பண்பாடு' என்று கருத்துகள் பதிவிடப்பட்டு வருகிறது. அதோடு பாஜக ஆளும் மாநிலமான குஜராத்தில் இதுபோன்ற நிகழ்வு நடைபெற்ற நிலையில், தமிழ்நாட்டில் பாகிஸ்தான் வீரர்களுக்கு வரவேற்பு அளித்த வீடியோ வைரலாகி வருகிறது.
Also Read
-
“மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்களை அதிகரிக்க வேண்டும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
"அரசியல் செய்யும் மதுரை ஆதீனம், மட விவகாரங்களில் இருந்து விலக வேண்டும்" - இளைய ஆதினம் புகார் !
-
ரூ.3,201 கோடி முதலீட்டில் 6,250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் MoU!
-
சென்னையில் நாளை 13 இடங்களில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் : இடங்கள் குறித்த விவரம் உள்ளே !
-
”இளைஞர்களின் வெற்றியை உறுதி செய்திடுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!