Sports
லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் மீண்டும் கிரிக்கெட்: வெளியான அறிவிப்பு.. அறிமுகமாகும் விளையாட்டுகள் என்னென்ன?
19-வது ஆசிய விளையாட்டு போட்டிகள், சீனாவில் நடந்து முடிந்தது. பொதுவாக ஆசிய விளையாட்டு போட்டியில் கிரிக்கெட் இடம்பெறாத நிலையில், இந்த தொடரில் கிரிக்கெட் போட்டியும் சேர்க்கப்பட்டது. ஒன்பது ஆண்டுகளுக்கு பின்னர் ஆசிய விளையாட்டு போட்டியில் கிரிக்கெட் சேர்க்கப்பட்ட நிலையில், அதில் இந்திய அணி ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளில் தங்கம் வென்று அசத்தியது.
அதனைத் தொடர்ந்து தற்போது 2028 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் இல் நடைபெறவுள்ள ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட் தொடர் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 1900 ஆம் ஆண்டு நடைபெற்ற கோடைகால ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட் விளையாடப்பட்டது. ஆனால், அப்போது டெஸ்ட் போட்டிகள் மட்டுமே இருந்ததால் நாட்கள் பற்றாக்குறை காரணமாக பின்னர் வந்த ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் சேர்க்கப்படவில்லை.
ஆனால், தற்போது டி20 போட்டிகள் வந்ததால் சில மணி நேரத்துக்குள் கிரிக்கெட் போட்டிகள் நிறைவடையும் நிலை ஏற்பட்டது. இதனால் மீண்டும் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்கவேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த1998 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் காமன்வெல்த் போட்டிகளில் கிரிக்கெட் தொடர் சேர்க்கப்பட்டது.
அதே நேரம் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை இணைக்க ஐசிசி அமைப்பு கடந்த சில ஆண்டுகளாக முயற்சித்து வந்தது. வரும் 2028 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் இல் நடைபெறவுள்ள ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட் தொடர் மீண்டும் அறிமுகம் செய்வதற்கான பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வந்தன.
இந்த நிலையில், 2028-ம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் சேர்க்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. கிரிக்கெட், பேஸ்பால், ஃபிளாக் ஃபுட்பால், லுக்ராஸ், ஸ்குவாஷ் ஆகிய விளையாட்டுகளைச் சேர்க்கப் பரிந்துரைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வார இறுதியில் மும்பையில் நடக்கும் ஒலிம்பிக் கமிட்டி கூட்டத்தில் இதுகுறித்து உறுதிசெய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
பச்சிளம் குழந்தைகளின் மருந்துக்கு தட்டுப்பாடு; என்ன செய்துக்கொண்டிருக்கிறது சுகாதாரத்துறை? : கனிமொழி MP!
-
சென்னையில் 65 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை: த.வெ.க இளைஞரணி நிர்வாகி கைது!
-
மின்வெட்டே கிடையாதென தமிழ்நாட்டு மக்கள் காதில் பூ சுற்றும் தவெகவின் மெகாவாட் பொய்கள் : முரசொலி தலையங்கம்!
-
வாக்களித்த மக்களுக்கு கைக்கொடுக்க இவ்வளவு தயக்கம் ஏன்? - முதலமைச்சரின் சர்ச்சை செயலுக்கு எழும் கண்டனம்!
-
அதிரடியாக ஜாகீர் கானை இறக்கிய சிஎஸ்கே.. தோனியின் மாஸ்டர் மைண்ட்.. இதுதான் ரகசியம்.. ரசிகர்கள் மகிழ்ச்சி!