Sports

இவர் என்ன குழந்தைத்தனமாக பேசுகிறார்.. ரோஹித் சர்மாவுடன் ஒப்பிட்டு சக வீரரை விமர்சித்த ஷாகிப் அல் ஹசன் !

2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. இதனால் இந்த தொடர் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடருக்கு அனைத்து அணிகளும் தயாராகிவரும் நிலையில், இந்த தொடருக்கு முன்னதாக வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டனும் , சீனியர் நட்சத்திர வீரருமான தமீம் இக்பால் ஓய்வை அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் வங்கதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், வங்கதேச பிரதமர் சேக் ஹசினா இந்த விவகாரத்தில் தலையிட்டு தமீம் இக்குபால் பிரதமரை நேரில் சென்று சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பின்னர் தமீம் இக்பால் தனது ஓய்வு முடிவை திரும்ப பெற்றுள்ளதாக அறிவித்துள்ளார். இதனால் அவர் உலகக்கோப்பை அணியில் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், வெளியான உலகக்கோப்பைக்கான வங்கதேச அணியில் தமீம் இக்பால் பெயர் இடம்பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தமீமின் பெயர் அணியில் இடம்பெறாததற்கு அந்த அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன்தான் காரணம் என்று கூறப்பட்டது.இது குறித்து வெளியான செய்திகளில் தமீம் அணியில் இடம்பிடித்தால் நான் அணியில் இருந்து விலகிக்கொள்கிறேன் என அவர் தேர்வு குழுவுக்கு மிரட்டல் விடுத்ததாலேயே தமீம் இக்பாலை அணியில் சேர்க்கவில்லை என தகவல் வெளியானது.

இது குறித்து பேசிய தமீம் இக்பால், நான் தொடர்ச்சியாக 16 ஆண்டுகளாக பங்களாதேஷ் அணிக்காக துவக்க வீரராக விளையாடி வருகிறேன். ஆனால், என்னை உலககோப்பையில் நடுவரிசையில் விளையாட வைக்க இருப்பதாக செய்திகள் கிடைத்தது. எனக்கு அந்த இடத்தில் எப்படி விளையாடுவது என்றே தெரியாது. எனவே நான் விளையாடாமல் இருப்பதே நல்லது"என கூறியிருந்தார்.

இந்த நிலையில், அவரின் இந்த கருத்துக்கு வங்கதேச கேப்டன்ஷாகிப் அல் ஹசன் பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்துப் பேசிய அவர், "இந்திய அணியில் ரோஹித் சர்மா ஏழாம் இடத்திலிருந்து தொடக்க வீரராக களமிறங்கி 10 ஆயிரம் ருண்களுக்கு மேல் அடித்துள்ளார். அதே போல சில வீரர்களுக்கு மூன்று மற்றும் நான்காம் இடங்களில் பேட்டிங் செய்வதில் என்ன பிரச்சனை ? இப்படி சொல்வது இது என்னுடைய பேட் இதை யாருக்கும் தரமாட்டேன். நான்தான் விளையாடுவேன் என சொல்லும் குழந்தைத்தனமானது.நீங்கள் அணியை பற்றி சிந்திக்கவே இல்லை"என விமர்சித்துள்ளார்.

Also Read: உலகக்கோப்பைதான் எனது கடைசி தொடர்.. 24 வயதிலேயே ஓய்வை அறிவித்த பிரபல IPL வீரர்.. யார் அவர் ?