Sports

உலகக்கோப்பைதான் எனது கடைசி தொடர்.. 24 வயதிலேயே ஓய்வை அறிவித்த பிரபல IPL வீரர்.. யார் அவர் ?

இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடரில் விராட் கோலி மற்றும் ஆப்கான் வீரர் நவீன் உல் காஃக் இடையேயான முதல் முக்கிய கவனம் பெற்றது லக்னோ மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதிய ஆட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த போட்டியின்போது பெங்களூரு அணி பீல்டிங் செய்துகொண்டிருந்தபோது லக்னோ அணி வீரர் நவீன் உல் ஹாக் மற்றும் கோலிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது விராட் கோலி தனது ஷூவை தாக்கி அதில் உள்ள தூசுதான் நீ என நவீன் உல் ஹாக்கை நோக்கி காட்டியதுபோல காட்சி இடம்பெற்றது.

பின்னர் இந்த போட்டி முடிந்ததும் வீரர்கள் கைகுலுக்கியபோது லக்னோ வீரர் நவீன் உல் காஹ் மற்றும் விராட் கோலி ஆகியோர் ஆக்ரோஷமாக பேசிக்கொண்டனர். பின்னர் லக்னோ வீரர் கையில் மேயர்ஸ் விராட் கோலியோடு பேசிக்கொண்டிருந்த நிலையில், அவரை காம்பிர் பேசவேண்டாம் என்பதுபோல இழுத்துச்சென்றார்.இதனால் ஆத்திரம் அடைந்த விராட் கோலி காம்பிரிடம் ஏதோ கூற கோலிக்கும் காம்பிருக்கும் இடையே அங்கு கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே இரு அணி வீரர்களும் இருவரையும் கட்டுப்படுத்தி அங்கிருந்து அழைத்துச்சென்றனர்.

இதனிடையே நவீன் மற்றும் கோலி இடையேயான மோதலை முடிவுக்கு கொண்டுவர லக்னோ அணி கேப்டன் கே.எல்.ராகுல் முயற்சி செய்தார். நவீனிடம் சென்று கோழியுடன் சமாதானமாக செல்ல அவர் கோரிக்கை விடுத்த நிலையில், அதற்கு நவீன் உல் ஹாக் மறுத்து அங்கிருந்து நகர்ந்தார். இதனால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. இந்த மோதல் அதன்பின்னர் ஐபிஎல் தொடரின் இறுதிவரை பல்வேறு விதங்களில் வெளிப்பட்டது.

இந்த சர்ச்சை மூலம் உலகளவில் பிரபலமான ஆப்கான் வீரர் நவீன் உல் ஹாக் தற்போது தனது 24 வயதிலேயே ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் அணிக்காக கடந்த 2016-ஆம் ஆண்டு அறிமுகமான நவீன் உல் ஹாக் இதுவரை 7 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

எனினும் சமீப காலமாக ஒருநாள் போட்டிகளுக்காக அணியில் இடம்பெறாத அவர் உலகக்கோப்பைக்கான ஆப்கானிஸ்தான் அணியில் இடம்பிடித்துள்ளார். இந்த நிலையில், இந்த உலகக்கோப்பை தொடரோடு ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்துள்ளார்.இது குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பேசியுள்ள அவர். உலகக் கோப்பையுடன் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போவதாகவும், தொடர்ந்து டி20 போட்டிகளில் விளையாடுவேன் என்றும் கூறியுள்ளார்.

Also Read: உலககோப்பைக்கான வங்கதேச அணியில் நட்சத்திர வீரர் புறக்கணிப்பு: பின்னணியில் ஷாகிப் அல் ஹசன்- ரசிகர்கள் ஷாக்!