Sports
"அஸ்வின் சர்ச்சையானவர், அவர் அணிக்கு வந்தது சிலருக்கு நல்லதல்ல " - டி வில்லியர்ஸ் கூறியது என்ன ?
5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் 1975ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பையை 1983ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக கைப்பற்றியது. அதன்பின் 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையை தோனி தலைமையிலான அணி வென்றது.
தற்போது 2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. பொதுவாக அனைத்து உலகக்கோப்பை தொடர்களிலும் குறைந்தது ஒரு தமிழ்நாடு வீரராவது அணியில் இடம்பிடிப்பர். ஆனால், இந்த உலகக்கோப்பைக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் ஒரு தமிழ்நாடு வீரர் கூட இடம்பிடிக்காதது சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த சூழலில், ஆசியக்கோப்பை போட்டியின்போது உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த அக்சர் படேல் காயம் காரணமாக பாதியிலேயே விலகினார். இதனால் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் அணிக்கு அழைக்கப்பட்ட ஆசியக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கான இந்திய அணியிலும் இடம்பிடித்தார்.
அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் தமிழக வீரர்கள் அஸ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம்பிடித்தனர். அதில் ஆடும் 11 வீரர்கள் கொண்ட பட்டியலில் இடம்பிடித்த அஸ்வின் முதல் போட்டியில் 1 விக்கெட் இரண்டாவது போட்டியில் 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இதன் காரணமாக உலகக்கோப்பை அணியில் அஸ்வினை சேர்க்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இந்த நிலையில், அஸ்வின் முதலில் இருந்தே அணியில் ஏன் இல்லை? என்பது எனக்குப் புரியவில்லை என முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் டி வில்லியர்ஸ் கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், " அஸ்வினை மீண்டும் இந்திய அணிக்குள் கொண்டு வந்தது நம்ப முடியாத நடவடிக்கை. அஸ்வின் புத்திசாலி மற்றும் அனுபவம் வாய்ந்தவர். இதனால் இந்த செய்தி தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு நல்லது கிடைத்து.
அஸ்வின் பெரிய தருணங்களில் நம்ப முடியாத திறமைகளை வெளிப்படுத்தி சிறப்பாக விளையாடியுள்ளார். மேலும், பேட் மற்றும் பந்து இரண்டிலும் சிறப்பாக செயல்படுபவர். ஆனால் அவர் ஏன் முதலில் இருந்தே அணியில் ஏன் இல்லை? என்பது எனக்குப் புரியவில்லை. நான் அவருடைய பெரிய ரசிகன். அவர் எப்பொழுதும் கொஞ்சம் சர்ச்சையானவர். அவர் அணியின் வெற்றிக்காக விளையாடுகிறார்" என்று கூறியுள்ளார்.
Also Read
-
"பாஜகவால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது" - அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா பேட்டியால் சலசலப்பு !
-
அங்கன்வாடி மையங்கள் மூடலா? மீண்டும் போலி செய்தி வெளியிட்ட தினமலர்.. உண்மை என்ன? - விவரம் உள்ளே!
-
சென்னையில் COOP-A-THON மினி மாரத்தான் போட்டி.. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய அமைச்சர்கள் !
-
“மனித குலத்துக்கே செய்கின்ற ஒரு மாபெரும் தொண்டு!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!
-
தினமலரின் பொய் செய்தி! - அங்கன்வாடி மையங்கள் குறித்து விளக்கிய தமிழ்நாடு அரசு!