Sports
அப்போ தென்னாபிரிக்கா.. இப்போ இந்தியா.. தொடர்ந்து 5 தோல்விகள்.. கடும் நெருக்கடியில் ஆஸ்திரேலியா !
ஆஸ்திரேலிய அணி தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 போட்டி, மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றது. இதில் டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றது.
அதன்பின்னர் நடைபெற்ற ஒருநாள் போட்டி தொடரின் முதல் போட்டியில், ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும், ஆஸ்திரேலிய அணி 123 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
ஆனால் அதன்பின்னர் நடைபெற்ற கடைசி மூன்று ஒருநாள் போட்டியிலும் தென்னாபிரிக்கா ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி தொடரை 3-2 என கைப்பற்றியது. அதிலும் கடைசி 3 ஒருநாள் போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி 111 ரன்கள் வித்தியாசம், 164 ரன்கள் வித்தியாசம், 122 ரன்கள் வித்தியாசம் என படுதோல்வியை சந்தித்தது.
இந்த தொடருக்கு பின்னர் ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதன் முதல் ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. அதனைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்து தொடரை இழந்துள்ளது.
இந்த தொடருக்கு பின்னர் அந்த அணி நேரடியாக உலகக்கோப்பையில் பங்கேற்கும் நிலையில், தொடர்ந்து அந்த அணி 5 தோல்விகளை அடைந்துள்ளது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. அதே நேரம் கடந்த காலங்களில் உலககோப்பைக்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணி மோசமான ஆடினாலும், உலகக்கோப்பையில் சிறப்பாக ஆடி கோப்பையை வென்ற வரலாறு இருப்பதால் ஆஸ்திரேலிய அணியின் இந்த தோல்வி உலகக்கோப்பையில் பாதிப்பை ஏற்படுத்தாது என பல்வேறு விளையாட்டு நிபுணர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
நிதி நிறுவன மோசடி வழக்கு... பாஜக கூட்டணியை சேர்ந்த தேவநாதனுக்கு இடைக்கால ஜாமின் !
-
“நிலவில் முதலில் கால் வைத்தது பாட்டிதான் என்றுகூட சொல்வார்கள்!” : பாஜக-வினரை விமர்சித்த கனிமொழி எம்.பி!
-
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மும்முரம்! : சென்னை மாநகராட்சி தகவல்!
-
ஆதாரை ஆவணமாக ஏற்கக் கூடாது... தேர்தல் ஆணையத்துக்கு ஆதரவாக வாதிட்ட பாஜக - உச்சநீதிமன்றத்தின் பதில் என்ன?
-
"வரும் தேர்தலில் 3-ம் இடத்துக்கு விஜய்க்கும் சீமானுக்கும்தான் போட்டி" - அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி !