Sports
"இந்திய அணிக்காக தோனி எந்த தியாகத்தையும் செய்யவில்லை" - கம்பீரின் கருத்துக்கு ஸ்ரீசாந்த் பதிலடி !
இந்திய அணி 1983-ம் வருடம் முதல் முறையாக கிரிக்கெட் உலககோப்பையை வென்றது. அதன் பின்னர் பல வருடங்களாக உலககோப்பையையே வெல்லாத நிலையில், இந்திய அணிக்கு கேப்டனாகி முதல் டி20 உலகக்கோப்பை தொடரிலேயே இந்திய அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார் எம்.எஸ்.தோனி.
அதன்பின்னர் 2011 உலககோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி கோப்பை என தோனிகேப்டனாக இருந்து மூன்று விதமான உலகக் கோப்பை வென்று இந்திய அணியின் கிரிக்கெட் வரலாற்றில் சரித்த சாதனையைப் படைத்தது. மேலும், மைதானத்தில் எந்தவித ஆக்ரோஷத்தையும் காட்டாமல் களத்தில் தனது பேட்டால் பதிலடி கொடுப்பார். இதனாலேயே இவரை இந்திய ரசிகர்களைத் தாண்டி உலகம் முழுவதும் ரசிகர்களை சம்பாதித்தார்.
அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்தும் ஓய்வு பெற்ற தோனி தற்போது ஐ.பி.எல் தொடரில் மட்டும் சென்னை அணியை வழிநடத்தி வருகிறார். தோனியின் தனித்துவமான தலைமைப்பன்பாலேயே இந்திய அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பைகளை குவித்ததாக பல்வேறு வீரர்களும் புகழாரம் சூட்டி வருகின்றனர்.
அந்த வகையில்," 6 மற்றும் 7 ஆகிய பேட்டிங் வரிசையில் விளையாடி தோனி இந்திய அணிக்காக மிகப்பெரிய தியாகத்தை செய்துள்ளார் என்று சமீபத்தில் இந்திய முன்னாள் வீரர் காம்பிர் கூறியிருந்தார். இந்த நிலையில், தோனி எந்த தியாகத்தையும் செய்யவில்லை என இந்திய முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் கூறியுள்ளார்.
இது குறித்துப் பேசிய அவர், "தோனி இந்திய அணிக்காக தியானத்தை செய்துள்ளார் என கம்பீர் கூறி இருக்கிறார். ஆனால் தோனி எந்த தியாகத்தையும் செய்யவில்லை. அவரை பொறுத்தவரை அதிக ரன்கள் சேர்ப்பதை விடவும், அதிக வெற்றிகளை குவிக்க வேண்டும் என்பது தான் ஆசையாக இருந்தது. அதனால் அதை தியாகம் என்று சொல்ல முடியாது.
எப்போதெல்லாம் அணிக்கு தேவையோ அப்போதெல்லாம் தோனி அணியை வெற்றிபெறவைத்தார். ஒவ்வொரு வீரரின் திறமைக்கேற்ப பேட்டிங் பொசிஷனை அளித்தார். தோனியை பொறுத்தவரை அணி தான் முதலில் இருக்கும். அதன்பின் தான் சொந்த சாதனையை பார்ப்பார்" என்று கூறியுள்ளார்.
Also Read
-
"தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்" - அமைச்சர் தங்கம் தென்னரசு !
-
"தனி மனிதரை விட தத்துவங்கள்தான் அரசியலை வழிநடத்தும்" - சுதர்சன் ரெட்டிக்கு முதலமைச்சர் ஆதரவு !
-
Drop Test சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்த இஸ்ரோ... பத்திரமாக கடலில் இறங்கிய விண்கலன் !
-
அகற்றப்படும் பழைய பாம்பன் ரயில் பாலம்... நினைவு சின்னமாக பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை !
-
ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள்.. கரூர் பாஜக நிர்வாகியை கைது செய்த போலீஸ் !