Sports

"இந்திய அணியில் நான் இடம்பெறாமல் போனதற்கு ICC விதிமுறைதான் காரணம்" - அஸ்வின் கூறிய விதிமுறை என்ன ?

5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் 1975ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பையை 1983ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக கைப்பற்றியது. அதன்பின் 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையை தோனி தலைமையிலான அணி வென்றது.

தற்போது 2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. இதனால் இப்போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடர் அக்டோபர் 5ம் தேதி தொடங்கி நவம்பர் 19ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த உலகக்கோப்பையை இந்திய அணி வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்த வண்ணம் உள்ள நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்த அணியில், ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் முக்கிய சுழற்பந்து வீச்சளர்களான அஸ்வின் மற்றும் சஹால் ஆகியோர் இடம்பெறவில்லை.

இந்த நிலையில், உலகக்கோப்பை அணியில் தான் இடம்பெறாததற்கு ஐசிசி அமைப்பின் புதிய விதிமுறையே காரணம் என இந்திய வீரர் அஸ்வின் கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், "2015 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட்டில் பலமான அணியாக இருந்தது. அப்போது பவர் பிளே முடிந்து ஐந்து வீரர்கள் வெளிவட்டத்தில் பீல்டிங் செய்யலாம் என்கின்ற விதி இருந்தது. இதனால் இந்திய சுழற் பந்துவீச்சாளர்கள் எதிரணியை எப்பொழுதும் கட்டுப்படுத்தினர்.

ஆனால், தற்கு பிறகு பவர் பிளே முடிந்து வெளிவட்டத்தில் நான்கு பீல்டர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டதால் சுழற் பந்துவீச்சாளர்கள் தடுமாற்றத்தை சந்தித்தனர். அதிலும் என்போன்ற விரல் சுழற் பந்துவீச்சாளர்கள் இந்த மாற்றத்துக்குப் பிறகு அதிக ரன்கள் விட்டுக்கொடுத்தனர். இதன் காரணமாக மெது மெதுவாக எங்களுக்கான வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது. இதன் காரணமாகத்தான் இந்திய அணியில் எனக்கான வாய்ப்புகள் குறைந்தது" என்று கூறியுள்ளார்.

Also Read: விக்கெட் எடுக்கவில்லை என்றால் வெறுப்படைவது ஏன்? - ஷாகின் அப்ரிடியை விமர்சித்த மாமனார் ஷாகித் அப்ரிடி !