Sports
டையமண்ட் லீக் : 0.15 மீட்டர் வித்தியாசத்தில் தங்கப்பதக்கத்தை இழந்த நீரஜ் சோப்ரா.. வெள்ளி வென்று அசத்தல் !
ஹரியானாவை சேர்ந்த நீரஜ் சோப்ரா கடனட்டை 2017, 2018 என இரண்டு ஆண்டுகளில் மட்டும் ஆசிய போட்டி, ஆசிய சாம்பியன்ஷிப், காமென்வெல்த் போட்டி என மூன்று பெரிய தொடர்களிலுமே தங்கம் வென்று அசத்தியிருந்தார். இதனால் அவர் மேல் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
அதனைத் தொடர்நது நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்கின் இறுதிச்சுற்றில் 87.58 மீட்டருக்கு வீசி தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார். இதன் மூலம் தடகளத்தில் முதல் ஒலிம்பிக் தங்கத்தையும், அபினவ் பிந்த்ராவுக்கு பின்னர் ஒலிம்பிக் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையைப் படைத்தார்.
அதோடு நிற்காத அவர், பின்லாந்தில் சர்வதேச ஈட்டி எறிதல் தொடர், டயமண்ட் லீக் தொடர் என செல்லும் அனைத்து இடங்களிலும் தொடர் சாதனைப் படைத்திருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது ஹங்கேரி தலைநகரமான புடாபெஸ்ட் நகரில் நடந்த உலகத் தடகள சாம்பியன்ஷிப் தொடரில் 88.17 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கப்பதக்கத்தை வென்றார்.
இந்த நிலையில், தற்போது சுவிச்சர்லாந்து நாட்டில் உள்ள ஜூரிச் நகரில், ஜூரிச் டையமண்ட் லீக் 2023 தொடர் நடந்து வருகிறது. இந்த தொடரின் ஈட்டி எறிதல் சுற்றில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா கலந்துகொண்டார். இந்த தொடரிலும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற அவர், 5-வது முயற்சியில் 85.71 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்தார்.
எனினும் அவரை விட 0.15 மீட்டர் அதிக தூரத்தில் ஈட்டி எறிந்த செக் குடியரசின் ஜாகுப் வால்டிச் (85.86 மீட்டர் ) தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். அதே நேரம் இரண்டாவது இடம் பிடித்த இந்தியாவின் நீரஜ் சோப்ராவெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.
Also Read
-
மும்முரமாக நடைபெறும் தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை மேம்பாலப் பணி! : அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு!
-
“முதலமைச்சர் கோப்பை 2025-ல் 16 லட்சம் இளைஞர்கள் பங்கேற்பு!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
“நாட்டிற்கு பெருமை சேருங்கள்! களம் நமதே! வெற்றி நமதே!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
”குடும்பச் சண்டையில் உள்ள வன்மத்தை இளைஞர்கள் மீது கொட்டாதீர் : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பதிலடி!
-
முதலமைச்சர் கோப்பை – 2025 நிறைவு! : கோப்பைகள் மற்றும் பரிசுகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!