Sports
FIFA மகளிர் உலகக் கோப்பை : முதல் முறையாக கோப்பையை வென்ற ஸ்பெயின்.. இங்கிலாந்து அணியை வீழ்த்தி அபாரம் !
FIFA மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடர் ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகளில் நடைபெற்று வருகிறது. அதன் லீக் போட்டிகள் முடிவடைந்து நிலையில், முக்கிய அணிகள் தொடரில் இருந்து வெளியேறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. லீக் சுற்றில் தரவரிசையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் அணியான ஜெர்மனி, 7-வது இடத்தில் இருக்கும் கனடா, 8-வது இடத்தில் இருக்கும் பிரேசில் போன்ற அணிகள் வெளியேறின.
அதனைத் தொடர்ந்து 'ரவுண்ட் ஆப் 16' ஆட்டத்தில் நான்கு முறை உலககோப்பை வென்ற அணியும், நடப்பு சாம்பியனுமான அமெரிக்கா - ஸ்வீடன் அணியை எதிர்கொண்டது. இதில் ஸ்வீடன் அணி அமெரிக்காவை பெனால்டி சூட் அவுட்டில் வீழ்த்தியது.
காலிறுதியில் ஸ்பெயின், நெதர்லாந்து, ஜப்பான், ஸ்வீடன், இங்கிலாந்து, கொலம்பியா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் ஆகிய அணிகள் முன்னேறின. இதில் காலிறுதி போட்டியில் ஸ்பெயின் அணி நெதர்லாந்து அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு சுற்றுக்கு முன்னேறியது. அதே போல மற்றொரு போட்டியில், ஸ்வீடன் அணி ஜப்பானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
அதோடு போட்டியை நடத்தும் நாடுகளில் ஒன்றான ஆஸ்திரேலியா பிரான்ஸ் அணியை 7-க்கு 6 என்ற கணக்கில் பி அரையிறுதிக்கு முன்னேறியது. மற்றொரு போட்டியில் ஐரோப்பிய சாம்பியனான இங்கிலாந்து அணி, கொலம்பியா அணியை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
தொடர்ந்து நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணி ஸ்வீடன் அணியை எதிர்கொண்டது. இதில் ஸ்பெயின் அணி 2-1 என்ற கணக்கில் ஸ்வீடன் அணியை வீழ்த்தி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
அதன்பின்னர் நடந்த இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் போட்டியை நடத்தும் ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது. இதில் இங்கிலாந்து அணி 3-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்த நிலையில், சிட்னி நகரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில், முதல் முறை உலகக்கோப்பை வெல்ல ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் ஆரம்ப முதலே ஆதிக்கம் செலுத்திய ஸ்பெயின் அணி போட்டியின் 29-வது நிமிடத்தில் கோல் அடித்தது. ஸ்பெயின் அணியின் கார்மோனா இந்த கோலை பதிவு செய்தார்.
இரண்டாவது பாதியில் இங்கிலாந்து அணி பதில் கோல் அடிக்க தீவிர முயற்சி செய்தும், கடைசிவரை பலன் கிடைக்கவில்லை. இதனால், 1-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி ஸ்பெயின் அணி முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. இந்த தொடரில் 5 கோல்கள் அடித்த ஜப்பான் வீராங்கனை ஹீனட்டா மியாசவா அதிக கோல் அடித்த வீராங்கனைக்கான தங்க ஷூ விருதை வென்றார்.முன்னதாக நடைபெற்ற மூன்றாவது இடத்துக்கான போட்டியில் ஸ்வீடன் அணி 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி உலககோப்பை தொடரில் மூன்றாவது இடத்தை பிடித்தது.
Also Read
-
“தி.மு.க.வை வகுத்தால் தமிழ்நாடு! தமிழ்நாடு மக்களை கூட்டினால் தி.மு.க!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
தந்தை பெரியார் பிறந்தநாள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “சமூக நீதி நாள்” உறுதிமொழி ஏற்பு !
-
எதிர்தரப்பு வாதங்களை கேட்காமலே அதானிக்கு ஆதரவாக வெளியான தீர்ப்பு... அதிர்ச்சி அளித்த நீதிபதிகள் !
-
“பச்சை, மஞ்சள் கலர் பஸ்ல யாரு வந்தாலும், கடைசியா பிங்க் கலர் பஸ்தான் ஜெயிக்கும்” - துணை முதலமைச்சர் கலகல!
-
என்றென்றும் ஒலிக்கும் குரல்... அன்றும்.. இன்றும்... என்றும் பெரியார்! - #HBDPeriyar147 !