Sports
ஜெய்ஸ்வால் - சுப்மன் கில் அபாரம்.. 17 ஓவர்களிலேயே போட்டியை முடித்த இந்தியா.. தொடரை சமன் செய்து அசத்தல் !
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக டெஸ்ட், ஒருநாள். டி20 தொடரில் பங்கேற்க அந்த நாட்டுக்கு சென்றுள்ளது. இதன் டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் வென்றது.
அதனை தொடர்ந்து தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. பின்னர்ட் தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
அதனைத் தொடர்ந்து இரண்டாவது டி20 போட்டியிலும் மேற்கிந்திய தீவுகள் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி வெற்றிப்பெற்றது. பின்ன நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று பதிலடி கொடுத்தது.
இந்த நிலையில், நேற்று முக்கியமான 4-வது டி20 போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி முதலில் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் விக்கெட்டுகளை இழந்தாலும், ஹோப் மற்றும் ஹெட்மயரின் அதிரடி காரணமாக 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் குவித்தது.
பின்னர் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர்களாக வந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் - சுப்மன் கில் ஜோடி மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். சிறப்பாக ஆடிய சுப்மன் கில் 47 பந்துகளில் 77 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். எனினும் இறுதிவரை ஆட்டமிழக்காத ஜெய்ஸ்வால் 51 பந்துகளில் 84 ரன்கள் குவித்து இந்திய அணியை 17 ஓவர்களிலேயே இலக்கை எட்டி வெற்றிபெற வைத்தார். இதனால் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை 2-2 என சமன் செய்துள்ளது.
Also Read
-
மகளிர் டி20: யாருக்கு உலகக் கோப்பை.. ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலியா.. தட்டிப்பறிக்குமா இங்கிலாந்து!
-
சர்வதேச அளவில் வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டம் தொடக்கம்.. சச்சினை முந்திய வரலாற்று நிகழ்வு : முழு தகவல் அறிய!
-
கோவில் குடமுழுக்கில் பிரச்சனை.. தட்டிக்கேட்ட பெண்ணை கொடூரமாக தாக்கிய தவெக நிர்வாகி -கொந்தளிக்கும் மக்கள்!
-
தவெக அரசின் அட்டூழியம்.. புகாரை அடுக்கிய திமுக.. அதிர்ந்து போன ஆளுநர் மாளிகை! - முழு பட்டியல் இதோ!
-
FIFA 2026: திணறிய அர்ஜென்டினா.. உலகையே திரும்பிப் பார்க்க வைத்த கேப் வெர்டே அணி!