Sports
செஸ் உலகக் கோப்பை தொடர் : உலகின் நம்பர் 2 வீரரை வீழ்த்திய தமிழ்நாடு கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா !
கடந்த 2019-ம் ஆண்டு மும்பையில் Under 18 உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் 66 நாடுகளைச் சேர்ந்த 450க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொண்டனர். இதன் இறுதிப்போட்டியில் ஜெர்மனி வீரரை வீழ்த்தி அப்போது 14 வயதான தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார்.
14 வயது வீரர் Under 18 உலக செஸ் சாம்பியன்ஷிப் வென்றது அப்போது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. அதைத் தொடர்ந்து பிரக்ஞானந்தா இந்திய அளவில் பேசப்பட்டார். அதனைத் தொடர்ந்து உலகின் நம்பர் 1 வீரரும் முன்னாள் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை பிரக்ஞானந்தா தோற்கடித்து உலகையே ஆச்சரியத்தில் மூழ்க வைத்தார்.
பின்னர் கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில், பிரக்ஞானந்தா வெண்கல பதக்கம் வென்று அசத்தினார். இப்படி தொடர் சாதனைகளை நிகழ்த்திவரும் பிரக்ஞானந்தா தற்போது உலகத் தரவரிசையில் 2-ஆம் இடத்தில் உள்ள அமெரிக்காவின் ஹிகாரு நாகமுராவை வென்று அசத்தியுள்ளார்.
தற்போது அசர்பைஜானில் செஸ் உலகக் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இதில் அமெரிக்க வீரர் நாகமுராவுடன் ஆடிய முதல் ஆட்டம் சமம் ஆன நிலையில், அவருடன் நடைபெற்ற இரண்டாவது போட்டியின் சமனில் முடிந்தது. அதன் பின்னர் நடைபெற்ற இரண்டு ரேப்பிட் நேர அளவு கொண்ட ஆட்டத்தில், 3-1 என்ற புள்ளிக் கணக்கில் நாகமுராவை வென்று 5-வது சுற்றுக்கு பிரக்ஞானந்தா தகுதி பெற்றுள்ளார்.
பிரக்ஞானந்தா ஹிகாரு நாகமுராவுடனான ஆட்டத்தில் போராடி வென்றதும் உலகின் நம்பர் 1 வீரரான கார்ல்சன் தனது இருக்கையில் இருந்து எழுந்து பிரக்ஞானந்தாவை பாராட்டி சென்றார். இந்த தொடரில் மற்றொரு தமிழக வீரரான குகேஷும் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !
-
5 நாட்கள் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... நிர்வாகம் அறிவிப்பு : விவரம் உள்ளே !
-
தங்கம், வெள்ளி விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? - தினசரி விலை மாற்றம் ஏன்? : முழுவிவரம் உள்ளே!
-
'பெரியார் உலகம்' பணிக்காக திமுக ரூ.1.70 கோடி நிதி : கி.வீரமணியிடம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலகப் புத்தொழில் மாநாடு - 2025 மகத்தான வெற்றி : ரூ.127 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!