Sports
”எப்போவும் என்னையும் கோலியையுமே கேள்வி கேட்கிங்க? ஜடேஜாவை கேட்க மாட்டுக்கிங்க?” -ரோகித்சர்மா கலகல பதில் !
இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் நாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்து அந்த அணிக்கு எதிராக டெஸ்ட், ஒருநாள். டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் வென்றது. பின்னர் நடைபெற்ற ஒருநாள் தொடரையும் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
அதனைத் தொடர்ந்து தற்போது டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணியில் விராட் கோலி, ரோஹித் ஷர்மா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி ஆகிய மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் மட்டுமல்லாது, சமீபத்தில் விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மாக்கு டி20 போட்டிகளில் அடிக்கடி ஓய்வு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டில் விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் ஒரு சர்வதேச டி20 போட்டியில் கூட விளையாடவில்லை. இதனைக் குறிப்பிட்டு நேர்காணல் ஒன்றில் ரோஹித் ஷர்மாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "கடந்த ஆண்டும் டி20 உலகக் கோப்பை இருந்ததால் நாங்கள் பெரும்பாலும் ஒருநாள் போட்டிகளில் விளையாடவில்லை. தற்போதும் அதையே நாங்கள் மீண்டும் செய்கிறோம்.
இப்போது ஒருநாள் உலகக்கோப்பை நடைபெறவுள்ளதால் நாங்கள் டி20 போட்டிகளில் விளையாடவில்லை. அனைத்து போட்டிகளையும் விளையாடாமல் உலகக் கோப்பைக்கு தயாராக வேண்டும் என்பதை கடந்த சில வருடங்களுக்கு முன்பே முடிவு செய்தோம்.
ஆனால், எங்களைப் போலவே டி20 போட்டிகளில் விளையாடாத ரவீந்திர ஜடேஜா பற்றி ஏன் நீங்கள் கேள்வி எழுப்பவில்லை? அவர் விளையாடாதது குறித்து யாரும் கேள்வி எழுப்பாதது ஏன்? உங்களுடைய கவனத்தை நான் புரிந்து கொள்கிறேன்“ என்று கூறியுள்ளார்.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!