Sports
"ICC உலகக்கோப்பையின் அரையிறுதிக்கு செல்லும் அணிகள் என்ன ?" - சேவாக் வெளியிட்ட கணிப்பு !
5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் 1975ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பையை 1983ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக கைப்பற்றியது. அதன்பின் 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையை தோனி தலைமையிலான அணி வென்றது.
தற்போது 2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. இதனால் இப்போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடர் அக்டோபர் 5ம் தேதி தொடங்கி நவம்பர் 19ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த உலகக்கோப்பையை இந்திய அணி வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்த வண்ணம் உள்ள நிலையில், இந்த உலகக்கோப்பை குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், உலகக்கோப்பையில் அரையிறுதிக்கு செல்லும் 4 அணிகள் குறித்த தனது கணிப்பை இந்திய முன்னாள் வீரர் சேவாக் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், " இந்த உலகக்கோப்பை தொடர் மிகவும் சவால் வாய்ந்தது. இதில் எந்த அணி அரையிறுதிக்கு செல்லும் என்பதை கணிப்பதே கடினம். ஆனால் என்னைப் பொறுத்தவரை இந்த முறை நிச்சயம் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள்தான் அரையிறுதி போட்டிக்குத் தகுதி பெறும்.
இதில், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் சிறப்பாக தெரிகின்றன. இதற்கு காரணம் அவர்கள் வழக்கத்திற்கு மாறான ஷாட்களையும், தனித்துவமாகவும் விளையாடுகின்றனர். அதே நேரம் சொந்த மண்ணில் இந்திய அணிக்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது" என்று கூறியுள்ளார்.
Also Read
-
“புறமுதுகு காட்டி ஓடுகிறவர்கள் நாங்கள் இல்லை; மக்களோடு மக்களாக இருந்து எதையும் எதிர்கொள்வோம்!” : உதயநிதி!
-
உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு... தஞ்சையில் ஆரவாரத்துடன் வரவேற்பு அளித்த தொண்டர்கள் !
-
“கைதுக்கு பயமில்லை... எதுவானாலும் நேருக்கு நேர் சந்திப்பேன்” – கெத்தாக பேட்டியளித்த உதயநிதி ஸ்டாலின்!
-
உதயநிதி ஸ்டாலின் கைது கண்டனத்திற்குரியது.. தவெக அரசு அராஜகம் - அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்!
-
“காவிரி பிரச்சினையை திசை திருப்ப... உதயநிதியை கைது செய்து அராஜகம்!” : மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!