Sports
சொத்து முழுவதையும் நெய்மருக்கு எழுதி கொடுத்த ரசிகர்.. காரணத்தை கேட்டு நெகிழ்ந்த நெட்டிசன்கள்!
பிரபல கால்பந்து வீரர் நெய்மர், பிரேசிலை சேர்ந்த சாண்டோஸ் கிளப்பில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவரிடம் இருந்த திறமையை கண்ட உலக புகழ்பெற்ற கால்பந்து கிளப்களில் ஒன்றான ஸ்பெயினை சேர்ந்த பார்சிலோனா கிளப் அவரை தங்கள் அணியில் விளையாட ஒப்பந்தம் செய்தது.
அந்த அணியில் இணைந்த நெய்மர். அதே அணியில் சக வீரரான மெஸ்ஸியுடன் பல்வேறு சாதனைகள் படைத்தார். மேலும், மெஸ்ஸி, ரொனால்டோவுக்கு பின்னர் உலகின் முக்கிய வீரராகவும் மாறினார். அதன்பின்னர் பார்சிலோனா கிளப்பில் இருந்து பிரான்சில் PSG அணி, நெய்மரை 222 பில்லியன் யூரோவுக்கு வாங்கியது. இது கால்பந்து உலகின் மிகப்பெரிய ஒப்பந்தமாக கருதப்பட்டது.
அதன் பின்னர் PSG அணிக்கு ஆடிய நெய்மர் தொடர்ந்து தற்போதுவரை அதே அணிக்கு ஆடி வருகிறார். கிளப் போட்டிகள் தவிர பிரேசில் தேசிய அணியின் முக்கியமான வீரராக திகழ்ந்து வருகிறார். கடந்த உலகக்கோப்பை கலப்பின் தொடரின் போது பிரேசில் அணிக்காக அதிக கோல் அடித்த கால்பந்து ஜாம்பவான் பிலேவின் சாதனையை நெய்மார் சமன் செய்தார்.
இத்தகைய புகழ்பெற்ற நெய்மாருக்கு உலகளவில் தீவிரமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். அந்த வகையில் அவருக்காக ரசிகர் ஒருவர் செய்த செயல் உலகளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. பிரேசில் நாட்டைச் சேர்ந்த 30 வயதான ரசிகர் ஒருவர் தனது சொத்து முழுவதையும் நெய்மருக்கு எழுதி வைத்துள்ளார்.
இது குறித்து வெளியான செய்திகள் அடிப்படையில், நெய்மரை எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால், எனது சொத்தை அவருக்கு எழுதிக்கொடுக்கவுள்ளதாக கூறியுள்ளார். மேலும், தனக்கு உடல்நிலை சரியில்லாததால், எனது சொத்துக்களை அரசாங்கமோ அல்லது எனக்கு நெருக்கம் இல்லாத உறவினர்களோ எடுத்துச் செல்வதை நான் விரும்பாதத்தால் இவ்வாறு செய்ததாகவும் அந்த ரசிகர் கூறியுள்ளார்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!