Sports
50 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கான அட்டவணை வெளியீடு.. இந்தியாவின் முதல் போட்டி யாருடன்? - எங்கு?
கிரிக்கெட் விளையாட்டில் மிகவும் உயர்ந்த தொடராக கருதப்படுவது ஒருநாள் உலகக் கோப்பை போட்டிதான். இந்த கோப்பையை வாங்குவதுதான் ஒவ்வொரு அணிக்கும் கனவு. இந்த தொடரில் நாமும் இடம் பெற வேண்டும் என ஒவ்வொரு கிரிக்கெட் வீரரின் கனவாகவும் இருக்கும்.
இந்த உலகக் கோப்பை போட்டி 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். 1975ம் ஆண்டிலிருந்து உலகக் கோப்பைத் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை இந்தியா 2 முறை மட்டுமே கோப்பையை வென்றுள்ளது. முதல் முறையாக 1983ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்றது.
அதன்பின்னர் 2011ம் ஆண்டு எம்.எஸ்.தோனி தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்றது. இதையடுத்து நடந்து மூன்று தொடர்களிலும் இந்திய அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை.
இந்நிலையில் 2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. இதனால் இப்போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உலகக் கோப்பைக்கான போட்டி அட்டவணையை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. அக்டோபர் 5ம் தேதி தொடங்கி நவம்பர் 19ம் தேதி வரை போட்டிகள் நடைபெறுகிறது.
முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இப்போட்டி குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. அதேபோல் இறுதிப்போட்டியும் இதே மைதானத்தில்தான் நடைபெறுகிறது.
அதேபோல் இந்திய அணியின் முதல் போட்டி ஆஸ்திரேலியாவுடன் நடைபெறுகிறது. இப்போட்டி சென்னையில் நடைபெறுவதால் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா அணி பங்கேற்கும் ஆட்டங்களின் விவரம்:-
அக்டோபர் 8 - இந்தியா - ஆஸ்திரேலியா - சென்னை
அக்டோபர் 11 இந்தியா - ஆப்கானிஸ்தான் - டெல்லி
அக்டோபர் 15 - இந்தியா - பாகிஸ்தான் - அகமதாபாத்
அக்டோபர் 19 - இந்தியா - வங்கதேசம் - பூனே
அக்டோபர் 22 - இந்தியா - நியூசிலாந்து - தர்மசாலா
அக்டோபர் 29 - இந்தியா இங்கிலாந்து - லக்னோ
நவம்பர் 2 - இந்தியா - தகுதிச்சுற்றில் தேர்வாகும் அணி 2 - மும்பை
நவம்பர் 5 - இந்தியா - தென்னாப்பிரிக்கா - கொல்கத்தா
நவம்பர் 11 - இந்தியா - தகுதிச்சுற்றில் தேர்வாகும் அணி 1 - பெங்களூரு
Also Read
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” பயிற்சிக் கூட்டம் : எப்போது?
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !
-
5 நாட்கள் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... நிர்வாகம் அறிவிப்பு : விவரம் உள்ளே !
-
தங்கம், வெள்ளி விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? - தினசரி விலை மாற்றம் ஏன்? : முழுவிவரம் உள்ளே!
-
'பெரியார் உலகம்' பணிக்காக திமுக ரூ.1.70 கோடி நிதி : கி.வீரமணியிடம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!