Sports
"அடுத்த ஆண்டு மட்டும் அல்ல, இந்த விதியால் தோனி அதிக ஆண்டுகள் ஆடுவார்" -பிராவோ ஆருடம் !
இந்திய கிரிக்கெட் அணியில் சச்சின், கங்குலி-க்கு பிறகு அடுத்து நட்சத்திர வீரராக யார் வருவார்கள் என்ற கேள்வி எழுந்தபோது தனது அமைதியாலும், அதிரடி ஆட்டத்தாலும் அந்த கேள்விகளுக்கு பதில் கொடுத்தவர்தான் எம்.எஸ்.தோனி. இந்திய அணியில் இப்படி ஒரு வீரரா என பலரும் வியந்து பார்க்கும் அளவுக்கு தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர், சச்சின் அவுட் ஆனால், இந்திய அணி தோற்றுவிடும் என கருதப்பட்ட நிலையையம் மாற்றிக்காட்டினார்.
அதனால் எம்.எஸ்.தோனி களத்திலிருந்தால் அது எவ்வளவு பெரிய ரன்னாக இருந்தாலும் அடித்து இந்திய அணிக்கு வெற்றியைத் தேடி கொடுத்துவிடுவார் என்ற நம்பிக்கையைப் இந்திய ரசிகர்களுக்கு விதைத்தார். அதன்பின்னர் இந்திய அணிக்கு கேப்டனாகி முதல் டி20 உலகக்கோப்பை தொடரிலேயே இந்திய அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார்.
இவர் கேப்டனாக இருந்து மூன்று விதமான உலகக் கோப்பை வென்று இந்திய அணியின் கிரிக்கெட் வரலாற்றில் சரித்த சாதனையைப் படைத்தது. மேலும், மைதானத்தில் எந்தவித ஆக்ரோஷத்தையும் காட்டாமல் களத்தில் தனது பேட்டால் பதிலடி கொடுப்பார். இதனாலேயே இவரை இந்திய ரசிகர்களைத் தாண்டி உலகம் முழுவதும் ரசிகர்களை சம்பாதித்தார்.
அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்தும் ஓய்வு பெற்ற தோனி தற்போது ஐ.பி.எல் தொடரில் மட்டும் சென்னை அணியை வழிநடத்தி வருகிறார். பெரும்பாலும் இந்த தொடர்தான் அவரின் இறுதி ஐபிஎல் தொடராக இருக்கும் என கருதப்படுவதால் சென்னை அணி விளையாடும் இடங்களில் எல்லாம் தோனிக்கு ஆதரவாக ரசிகர்கள் குவிந்தனர்.
அதே நேரம் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை அணி வெற்றிபெற்று கோப்பையை கைப்பற்றிய பின்னர் தோனி உடல்நலம் ஒத்துழைத்தால் அடுத்த ஐபிஎல் தொடரிலும் விளையாடுவேன் என்று கூறியிருந்தார்.
முன்னதாக பேசிய சென்னை அணியின் பயிற்சியாளர் பிராவோ, " இம்பாக்ட் பிளேயர் என்னும் விதிமுறையை பயன்படுத்தி எம்.எஸ்.தோனியை இன்னும் அதிக ஆண்டுகள் விளையாடுவார். இந்த விதியை பயன்படுத்தி 024-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் தோனி நூறு சதவீதம் விளையாடுவார். டினமான சூழ்நிலைகளை எப்படி சமாளித்து மீண்டு வருவது என்பது தோனிக்குக் கைவந்த கலை. அணி என்ன நெருக்கடியிலிருந்தாலும் தோனி அமைதியாகவே இருப்பார். எனவே, அவரது கேப்டன்சி அணிக்கு முக்கியம்" என்று கூறியுள்ளார். அவரின் இந்த கருத்து ரசிகர்களை மகிழ்ச்சியடைந்த வைத்துள்ளது.
Also Read
- 
	    
	      
சாலை விபத்தில் உயிரிழந்த திமுக உறுப்பினர்.. குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கினார் முதலமைச்சர்!
 - 
	    
	      
10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு.. தேர்வு தேதி என்ன? - முழு விவரம்!
 - 
	    
	      
ஒன்றிய அரசின் வழக்கை நான் விசாரிக்க கூடாது என அரசு நினைக்கிறது- தலைமை நீதிபதி கவாய் பகிரங்க குற்றச்சாட்டு
 - 
	    
	      
SIR : பீகாரில் நடந்தது இங்கும் நடக்காது என்று உத்தரவாதம் தர தேர்தல் ஆணையம் தயாரா? - முரசொலி கேள்வி !
 - 
	    
	      
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!