Sports
ஆஸ்கர் நாயகர்கள் பொம்மன்-பெள்ளியுடன் தோனி ! -CSK சார்பில் வழங்கப்பட்ட பரிசு என்ன தெரியுமா ?
கடந்த மார்ச் மாதம் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆஸ்கர் 2023 விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ’Everything All At Once' திரைப்படம் 7 பிரிவுகளில் ஆஸ்கர் விருதை வென்று அசத்தியுள்ள நிலையில், ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கும் ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.
அதேபோல மற்றொரு இந்திய ஆவணப் படமான ’The Elephant Whisperers’ குறும்படத்துக்கும் சிறந்த ஆவணக் குறும்படம் பிரிவில் ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. இதன் மூலம் ஆவணப்பட பிரிவில் இந்தியாவின் முதல் ஆஸ்கர் விருது பெற்ற படமாக ’The Elephant Whisperers’ மாறியுள்ளது.
இந்த படம் நீலகிரி தெப்பக்காடு யானைகள் சரணாலயத்தில் குடும்பத்தை இழந்த கைவிடப்பட்ட ரகு என்ற யானைக்குட்டிக்கும் அதைப் பராமரிக்கும் பொம்மன் பெள்ளி என்பவர்களுக்கு இடையே உருவான பிணைப்பு குறித்து பதிவு செய்தது.
இந்த படத்தில் நடித்ததன் மூலம் பொம்மன்- பெள்ளி தம்பதியினர் உலக அளவில் புகழ் பெற்றனர். அவர்களை தமிழநாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டினார். மேலும் அவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசாகவும் தமிழ்நாடு அரசு சார்பில் முதலமைச்சர் வழங்கினார்.
இந்த நிலையில், இன்று பொம்மன்-பெள்ளி தம்பதியினர் மற்றும் ஆவணப்படத்தின் இயக்குனர் கார்த்திகி ஆகியோர் சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனியை நேரில் சந்தித்தனர். அவர்களுக்கு தோனியின் சார்பில் தோனியின் 7-ம் நம்பர் பொறிக்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஜெர்சி பரிசாக வழங்கப்பட்டது. அதோடு அந்த ஜெர்சியில் தோனியின் பெயருக்கு பதில் கார்த்திகி, பொம்மன், பெள்ளி என அவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!