Sports
3.5 ஆண்டுகளுக்கு பிறகு சதம்.. ஒருவழியாக 28 டெஸ்ட் சதத்தினை பூர்த்தி செய்தார் விராட் கோலி !
ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. இதில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
அதைத் தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி டெல்லியில் தொடங்கியது. இந்த போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று பார்டர் கவாஸ்கர் டிராபியை தக்கவைத்தது. மேலும் 4 போட்டிகள் கொண்ட தொடரிலும் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது
பின்னர் மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்ற இந்தூரில் தோல்வியின்பிடியில் இருந்து மீண்டு இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இருந்தே அபாரமாக செயல்பட்ட ஆஸ்திரேலிய அணி இந்தியாவை அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஆதிக்கம் செலுத்தியது.மூன்றே நாளில் முடிந்த இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது.
அதன் பின்னர் நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி தற்போது அஹமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 480 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கவாஜா 180 ரன்கள் குவித்தார். பின்னர் ஆடிய இந்திய அணியில் அனைத்து வீரர்களும் சீராக ரன்கள் குவித்து வருகின்றனர்.
தொடக்க வீரர் சுப்மன் கில் 128 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், நிதானமாக ஆடிய இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி 240 பந்துகளில் சதம் விளாசினார். இதன் மூலம் 3.5 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் சதம் எடுத்த விராட் கோலி தனது 28 டெஸ்ட் சதத்தினை ஒருவழியாக பூர்த்தி செய்துள்ளார். இதில் வெறும் ஐந்து பவுண்டரிகளை மட்டுமே அடித்துள்ள கோலி மற்ற அனைத்து ரன்களையும் ஓட்டத்திலேயே எடுத்துள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
SIR : “அதிமுக - பாஜக களத்துக்கு வராதபோதுதான் சந்தேகமாக இருக்கிறது...“ - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
235-க்கும் மேற்பட்ட உணவு வகைகள்... 4 நாட்களுக்கு... களைகட்டும் பெசன்ட் நகரில் உணவுத் திருவிழா!
-
இறந்த 4 மாதக் குழந்தையை 20 ரூ. பிளாஸ்டிக் பையில் கொண்டு சென்ற அவலம்.. ஜார்கண்ட் சோகத்தின் பின்னணி என்ன?
-
SIR மூலம் சுமார் 1 கோடி வாக்காளர்கள் நீக்கம்: “தமிழ்நாட்டை குறிவைத்துள்ள பாஜக” - திருமாவளவன் MP கண்டனம்!
-
மனித விலங்கு மோதல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை.. அதிநவீன கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் திறப்பு!