Sports
"இந்தியாவில் சுழலும் மைதானங்கள் அமைக்க இதுவே காரணம்" - பயிற்சியாளர் ராகுல் டிராவிட் விளக்கம் !
ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. இதில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
அதைத் தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி டெல்லியில் தொடங்கியது. இந்த போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று பார்டர் கவாஸ்கர் டிராபியை தக்கவைத்தது. மேலும் 4 போட்டிகள் கொண்ட தொடரிலும் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது
அதனைத் தொடர்ந்து, மூன்றாவது டெஸ்ட் போட்டி இந்தூரில் நடைபெற்றது. தோல்வியின்பிடியில் இருந்து மீண்டு இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இருந்தே அபாரமாக செயல்பட்ட ஆஸ்திரேலிய அணி இந்தியாவை அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஆதிக்கம் செலுத்தியது.
மூன்றே நாளில் முடிந்த இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது. இந்த போட்டியில் அபாரமாக பந்துவீசிய ஆஸ்திரேலிய வீரர் நாதன் லியோன் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
முதல் இரண்டு போட்டிகளில் பந்துகள் வழக்கத்தை விட அதிகம் சுழன்றதாக கூறப்பட்ட நிலையில், முன்றாவது போட்டியில் முதல் செஷனில் இருந்து பந்துகள் பயங்கரமாக திரும்பியது. அதோடு இரண்டரை நாளில் இந்த டெஸ்ட் போட்டி முடிவுக்கு வந்தது. இதன் காரணமாக இந்த மைதானத்துக்கு சராசரிக்கும் குறைவான புள்ளிகளையே வழங்கியது.
இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்காக பெரும்பாலான நாடுகள் முடிவுகளை தரக்கூடிய ஆடுகளங்களையே தயார் செய்கிறார்கள் எனக் கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், "இந்த விவகாரத்துக்குள் நான் அதிகம் செல்லமாட்டேன். சில நேரங்களில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் சிக்கலில் இருப்பதால், முடிவுகள் கிடைக்கும் ஆடுகளங்களில் விளையாட முனைப்பு காட்ட வேண்டியது உள்ளது.
நாங்கள் வெளிநாடுகளுக்கு செல்லும் போது சில சவாலான ஆடுகளங்களில் விளையாடி உள்ளோம். 2022-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் விளையாடினோம். அங்கு சுழற்பந்து வீச்சாளர்கள் ஆட்டத்தில் இருந்து முற்றிலும் வெளியேற்றப்பட்டனர். முடிவுகளை அடையக்கூடிய ஆடுகளங்களையே அனைவரும் உருவாக்க விரும்புகிறார்கள். இது அவசியமானதும், விளையாட்டின் ஒரு பகுதியும் ஆகும்.அனைவரும் வெற்றி பெறவும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறவும் விரும்புகிறார்கள்" என்று கூறியுள்ளார்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!