Sports
இவர் விளையாடவில்லை என்றால் உலகம் அழிந்துவிடுமா என்ன? - இந்திய நட்சத்திர வீரரை விமர்சித்த முன்னாள் வீரர் !
ஐபிஎல் மும்பை அணிக்காக அறிமுகமான பும்ரா அதன்பின்னர் தனது அபார செயல்பாடு காரணமாக இந்திய அணியின் இடம்பிடித்தார். அதோடு குறுகிய காலத்தில் இந்தியாவின் முதன்மை பந்துவீச்சளராகவும் உயர்ந்தார். முதலில் அவர் லீமிடெட் போட்டிகளுக்கு மட்டுமே தகுதியான வீரர் என கூறப்பட்ட நிலையில், டெஸ்ட் போட்டிகளில் களமிறங்கி அங்கும் தன்னால் ஜொலிக்க முடியும் என்பதை நிரூபித்தார்.
தொடர்ந்து இந்திய அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பும்ரா அடிக்கடி ஏற்படும் காயத்தால் அவதிப்பட்டு வந்தார். இறுதியாக கடந்த ஆண்டு தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான தொடரின் போது காயமடைந்த பும்ரா, தற்போது வரை அவர் எந்த போட்டியிலும் விளையாடவில்லை.
கடந்த ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பையில் இந்தியா தோல்வியைத் தழுவ அவரின் காயமும் ஒரு காரணமாக கூறப்பட்டது. அதன் பின்னர் ஜனவரி மாதம் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் பும்ரா களமிறங்கப்படுவார் என தகவல்கள் கசிந்த நிலையில், முதுகுப் பகுதியில் தொடர்ந்து பிடிப்பு இருப்பதால் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து பும்ரா விலகியதாக அறிவிக்கப்பட்டது.
அப்போது இந்திய அணி முக்கியமான ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளதால் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் அவர் இடம்பெறவில்லை.
இந்த நிலையில், பும்ரா இனி நேரடியாக ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக தான் களமிறங்குவார் என வெளியான தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் பும்ரா ஐபிஎல் போட்டியில் விளையாடவில்லை என்றால் உலகம் அழிந்துவிடாது என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், "நீங்கள் முதலில் இந்திய வீரர் என்பதை மறந்துவிடாதீர்கள். முதலில் இந்தியாவுக்காக விளையாடி பின்னர் உங்கள் ஐபிஎல் அணிக்காக விளையாடுங்கள். பும்ரா உண்மையில் ஏதேனும் அசௌகரியத்தை உணர்ந்தால் பிசிசிஐ தலையிட்டு அவரை விடுவிக்க மாட்டோம் என்று ஐபிஎல் அணியின் உரிமையாளரிடம் தெரிவிக்கும். அவர் ஜோஃப்ரா ஆர்ச்சருடன் ஏழு ஆட்டங்களில் விளையாடவில்லை என்றால் உலகம் அழிந்து விடாது. அதே நேரத்தில், நீங்கள் உடற்தகுதியுடன் இருக்கும்போது, நீங்கள் தொடர்ந்து விளையாட வேண்டும். அது உங்களை ஆரோக்யத்துடன் வைத்திருக்கும்" எனக் கூறியுள்ளார்.
Also Read
-
“11 பந்துகளில் அரைசதம்.. முதல் தர கிரிக்கெட்டில் அசத்திய சூர்யவன்ஷி.. அசந்துபோன இலங்கை வீரர்கள்!”
-
“கல்விக்கூடத்தை அரசியல் வியாபரக் களமாக மாற்றினால்.. வேடிக்கை பார்க்க மாட்டோம்”-திமுக ஐடி விங் எச்சரிக்கை!
-
காவிமயமாகும் கல்வி; உயிரை காவுகேட்கும் நீட்தேர்வு - திமுக மாணவரணி சார்பில் ஜூன் 23-ல் கண்டன ஆர்ப்பாட்டம்!
-
“பனையூர் பங்களா முன் கூடும் கூட்டம்.. இன்னுமாடா இந்த ஊர்ல நம்மள நம்புராங்க என்ற நிலை”: அப்பாவு விமர்சனம்!
-
அரசுப் பள்ளியில் ஆபாசப் பாடலுக்கு ஆட்டம் போட்ட அமைச்சர் விஸ்வநாதன் : காணொளி வெளியாகி சர்ச்சை!