Sports
சாதித்த ஷஃபாலியின் படை.. U19 T20 உலகக்கோப்பையை வென்று அசத்திய இந்திய அணி.. BCCI வழங்கிய அட்டகாசமான பரிசு!
மகளிர் கிரிக்கெட் உலகளவில் தற்போது பிரபலமாகி வருவதால் மகளிருக்கான 19 வயதுக்குட்பட்டோருக்கான (under 19) உலகக்கோப்பையை நடத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் திட்டமிட்டது. அதன்படி முதல் 9 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தென் ஆப்பிரிக்காவில் கடந்த ஜனவரி 14ஆம் தேதி தொடங்கியது.
16 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டன. இந்த தொடரில் குரூப் டி பிரிவில் இடம்பிடித்திருந்த ஷஃபாலி வெர்மா தலைமையிலான இந்திய அணி தான் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்று சூப்பர் சிக்ஸ் பிரிவுக்கு முன்னேறியது.
சூப்பர் சிக்ஸ் பிரிவில் ஆஸ்திரேலியாவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்த நிலையிலும் இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்கு இந்திய முன்னேறியது. அரையிறுதிக்கு போட்டியில் நியூஸிலாந்து அணியை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. மற்றொரு அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலிய அணியை 3 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியாவும், இங்கிலாந்தும் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி ஆரம்பத்தில் இருந்தே தடுமாறியது. இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணியின் வீராங்கனைகள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இதனால் இங்கிலாந்து அணி 17.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து வெறும் 68 ரன்களை மட்டுமே எடுத்தது. பின்னர் 69 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்று முதல் முறையாக நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையை கைப்பற்றியது. இந்த போட்டியில் வெற்றிபெற்ற இந்திய அணிக்கு 5 கோடி ரூபாய் வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
Also Read
-
முதலமைச்சரின் ஜெர்மனி பயணம் மூலம் ரூ.7020 கோடி முதலீடு... 15,320 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி !
-
மூப்பனாரை பிரதமராக்க முயன்றவர் கலைஞர்.... திடீரென்று தமிழ் வேடம் போட்ட நிர்மலா - முரசொலி விமர்சனம் !
-
“மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்களை அதிகரிக்க வேண்டும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
"அரசியல் செய்யும் மதுரை ஆதீனம், மட விவகாரங்களில் இருந்து விலக வேண்டும்" - இளைய ஆதினம் புகார் !
-
ரூ.3,201 கோடி முதலீட்டில் 6,250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் MoU!