Sports
மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் கொடுமை.. பாஜக MP-க்கு எதிராக போராட்டம்.. ஒலிம்பிக் நாயகன் பங்கேற்பு !
ஒலிம்பிக், காமன்வெல்த், ஆசிய கோப்பை போன்ற தொடர்களின் இந்தியா சார்பில் மல்யுத்த தவறாமல் பதக்கம் வென்று நாட்டின் புகழை உயர்த்துபவர்கள் என்றால் அது மல்யுத்த வீரர்கள்தான். ஆனால் மல்யுத்த வீரர்களை மல்யுத்த கூட்டமைப்பு நிர்வாகிகள் மதிக்காமல் இருப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன.
இந்த நிலையில், மல்யுத்த கூட்டமைப்பில் பெண் வீராங்கனைகளுக்கு எதிராக பாலியல் ரீதியான தொந்தரவுகள் நடத்தப்படுவதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருப்பவர் பிரிஜ் பூஷன் சரண் சிங். இவர் பாஜக சார்பில் எம்.பியாகவும் செயல்பட்டு வருகிறார்.
இவர் பெண் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் கொடுமைகளை செய்வதாகவும், குறைந்தது 10, 12 வீராங்கனைகளுக்கு மேல் இவரால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பெண் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதோடு இவரால் தேசிய பயிற்சி முகாம்களில் நியமிக்கப்பட்ட சில பயிற்சியாளர்கள் பல ஆண்டுகளாக பெண் மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருகின்றனர் என்றும் குற்றசாட்டு எழுந்துள்ளது.
இந்த போராட்டத்தில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்ஷி மாலி போன்றவர்கள் கலந்து கொண்டனர். போராட்டம் தொடர்பாக பேசிய பஜ்ரங் புனியா "மல்யுத்த வீரர் நீண்ட காலமாக அவதிப்பட்டு வந்துள்ளனர். ஆனால், இப்போது இந்திய மல்யுத்த கூட்டமைப்பு எடுக்கும் ஒருதலைப்பட்சமான முடிவுகளை எதிர்த்து நாங்கள் இனி அமைதியாக இருக்க மாட்டோம் என்று முடிவு செய்துள்ளோம்.
இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர்கள் அனைவரும் எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை மற்றும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பால் எங்களை சிறப்பாக நடத்தும் வரை தேசிய அல்லது சர்வதேச போட்டிகளில் பங்கேற்க மாட்டார்கள்.நாங்கள் இந்தியாவுக்காக பதக்கங்களை வென்றால், அனைவரும் கொண்டாடுகிறார்கள். ஆனால், அதற்குப் பிறகு, குறிப்பாக கூட்டமைப்பால் நாங்கள் எவ்வாறு நடத்தப்படுகிறோம் என்பதைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை" என்று கூறியுள்ளார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“லண்டன் போய் முதலீடு ஈர்த்த லட்சணம் என்னன்னு தெரிஞ்சு போச்சு..” - விஜயை வெளுத்து வாங்கிய ஆர்.எஸ்.பாரதி!
-
ரெய்டு மற்றுமொரு திசைதிருப்பும் அரசியல் : த.வெ.க அரசுக்குத் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
3 நாள் விடுமுறை - கூடுதல் பேருந்துகளை விட வேண்டும் என்ற அறிவு கூட இல்லாத சேடிஸ்ட் த.வெ.க அரசு!
-
“த.வெ.க பொறுக்கிகளால் பெண் போலீசாருக்கே பாதுகாப்பில்லை” : தி.மு.க IT Wing கண்டனம்!
-
அமைச்சர் நிர்மல்குமார் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும் : சபாநாயகரிடம் தி.மு.க கடிதம்!