Sports
"வெள்ளையராக இருந்தால் முன்னுரிமை..அணித் தேர்வில் நிறப் பாகுபாடு உள்ளது" -ஆஸ்திரேலிய வீரர் பகிரங்க புகார்!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. பிரிஸ்பேனில் நடைபெற்ற முதலாவது போட்டியில் தென்னாப்பிரிக்காவை 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வீழ்த்தி அபார வெற்றிபெற்றது.
அதன்பின்னர் மெல்போர்னில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 182 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. பின்னர் மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்றது
இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா 195 ரன்கள் குவித்திருந்த போது அந்த அணியின் கேப்டன் கம்மின்ஸ் தங்களது இன்னிங்க்ஸை டிக்ளர் செய்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து இந்த போட்டி டிராவில் முடிய இந்த தொடரை ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்த நிலையில், ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா ஆஸ்திரேலிய அணிக்கான வீரர்கள் தேர்வில் நிறப் பாகுபாடு நிலவுவதாக கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், "ஆஸ்திரேலிய அணியைத் தொலைக்காட்சியில் பார்க்கும்போது வெள்ளை நிற வீரர்கள் தான் முழுமையாக இருப்பார்கள்.இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர்கள் நிறைய பேரை ஆஸ்திரேலியாவில் காண முடியும்.
ஆனால், அவர்கள் தொடர்ந்து அணியில் நீடிக்க மாட்டார்கள். கிரிக்கெட் ஆஸ்திரேலியாவில் மேல்மட்டத்தில் பல பயிற்சியாளர்களும் தேர்வுக்குழுவினரும் வெள்ளையர்களாக உள்ளார்கள். அவர்கள் ஆழ்மனதில் சார்பு நிலை வந்துவிடுகிறது. ஒரு வெள்ளை நிற வீரரும் ஓர் ஆசிய வீரரும் போட்டிக்கு இருந்தால் வெள்ளையராக உள்ள தேர்வுக்குழு உறுப்பினர், வெள்ளை நிற வீரரையே தேர்வு செய்வார். அவருடைய மகனைப் போல அந்த வீரர் இருக்கலாம். அந்த நிறம் தான் அவருக்குப் பழக்கமானதாக இருக்கிறது" எனக் கூறியுள்ளார்.
Also Read
-
“வாக்களிக்காத மக்களும் வாக்களிக்காமல் போய்விட்டோமே என்று வருத்தப்படுகின்றனர்” - துணை முதலமைச்சர் பேச்சு!
-
வேளாண் விளைபொருட்களுக்கான மதிப்புக்கூட்டும் மையங்கள்.. ரூ.1.50 கோடி மானியம்.. அமைச்சர் MRK பன்னீர்செல்வம்
-
“எதிர்காலத்தில் 2030க்குள் AIDS தொற்றில்லா தமிழ்நாட்டை உருவாக்குவோம்” - அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
ஒரே இடத்தில் ரேஷன் கார்டு சேவைகள்.. சென்னையில் பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் - எப்போது?
-
காஞ்சிபுரத்தில் 7,297 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள்.. வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி!