Sports
மச்சி என்று அஸ்வின் சொன்ன அந்த வார்த்தைதான் தன்னம்பிக்கை ஊட்டியது -ஸ்ரேயாஸ் ஐயர் நெகிழ்ச்சி !
இந்திய அணி வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த அணிக்கு எதிராக 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி முடித்தது. இதில் ஒருநாள் தொடரை வங்கதேச அணி 2-1 என்ற கணக்கில் வென்றது.
அதனைத் தொடர்ந்து நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 188 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது. பின்னர் நடந்த 2வது டெஸ்ட் போட்டியின் முதல் அன்னிங்சில் 227 ரன்னுக்கு வங்கதேச அணி ஆல் அவுட்டாக இந்திய அணி 314 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
பிறகு இரண்டாவது இன்னிங்சில் வங்கதேச அணி 231 ரன்களுக்கு அவுட்டானது. இதனால் 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது. இந்த போட்டியில் இந்தி அணி எளிதில் வெற்றி பெற்று விடும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் போட்டி தொடங்கிய சில நிமிடத்திலேயே 2 ரன்னில் கே.எல். ராகுல் அவுட்டானர். பின்னர் வந்த புஜாரா, அக்சர் பட்டேல், விராட் கோலி என அடுத்தடுத்த வீரர்கள் சொற்ப ரன்னிலேயே விக்கெட்டுகளை கொடுத்தனர்.. இதனால் இந்திய அணி தோற்று விடுமோ என்ற நிலை உருவானது.
இதையடுத்து ஆட்டத்தின் போக்கை உணர்ந்த ஸ்ரேஸ் அய்யர் நிதானமாக விளையாடினார். இவருடன் 8வது வீரராக கைகோர்த்த அஷ்வின் அதிரடியாக விளையாடினார். இந்த கூட்டணிதான் இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டது. பிறகு 47வது ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி திரில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் அஷ்வின் 42 ரன்களும், ஸ்ரேயஸ் ஐயர் 29 ரன்களும் எடுத்திருந்தனர். இந்த வெற்றியை அடுத்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி முழுமையாகக் கைப்பற்றியுள்ளது.இதையடுத்து இந்திய அணியின் இந்த வெற்றிக்குக் காரணமாக இருந்த அஷ்வினுக்கு ரசிகர்கள் முன்னாள் வீரர்கள் என பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், தற்போது அஸ்வின் குறித்து ஸ்ரேயாஸ் ஐயர் பேசியுள்ளார். அதில், "அஸ்வினின் தன்னம்பிக்கையை எப்போதும் நான் விரும்புவேன். அவர் களத்தில் வந்தபோது நாம் நிச்சயம் வெற்றிபெறுவோம், கவலை வேண்டாம் மச்சி " என்று அவர் தன்னிடம் கூறியதாக தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரூ.36.6 கோடியில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல் மதுரை Master Plan 2044 வரை... அசத்திய முதலமைச்சர்!
-
SWAYAM தேர்விலும் தமிழக மாணவர்களிடம் வன்மத்தை கொட்டும் ஒன்றிய பாஜக அரசு.. ஆதாரத்துடன் சு.வெ. கண்டனம்!
-
திட்டப் பணிகள் திறப்பு முதல் 1.77 லட்ச பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் வரை... மதுரையில் முதலமைச்சர்!
-
மதுரை பந்தல்குடி வாய்க்காலில் மேம்பாட்டுப் பணிகள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!
-
மதுரை, மேலமடை பகுதியில் ரூ.150 கோடியில் “வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்” - திறந்து வைத்தார் முதல்வர் !