Sports
"இந்த இளம்வீரர் டி20 போட்டிகளுக்கு எல்லாம் சரிவர மாட்டார்" - முன்னாள் இந்திய வீரர் வாஷிம் ஜாபர் கருத்து !
இலங்கைக்கு எதிரான முதல் சர்வதேச டி20 போட்டியை 2 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி. வான்கடே மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில், 162 ரன்களை சேஸ் செய்த இலங்கை, 160 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்த சர்வதேச டி20 தொடரில், 1-0 என முன்னிலை பெற்றிருக்கிறது ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி.
இந்த போட்டியில் இளம் அறிமுக வீரர் ஷிவம் மாவி. 4 ஓவர்கள் பந்துவீசிய அவர், 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். மேலும் மற்றொரு வேகப்பந்து வீச்சளர் உம்ரான் மாலிக் 27 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.கடைசி ஓவரில் இலங்கை வெற்றிக்கு 13 ரன்களே தேவைப்பட்டிருந்த நிலையில் அக்ஷர் படேலை பந்துவீச இலங்கை அணியால் அந்த ஒவரில் 10 ரன்களே எடுக்க முடிந்தது.
இந்த நிலையில், டி20 போட்டிகளுக்கு வேகப்பந்து வீச்சளர் உம்ரான் மாலிக் சரிப்பட்டு வரமாட்டார் என முன்னாள் இந்திய வீரர் வாஷிம் ஜாபர் கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், "வேகப்பந்து வீச்சில் முன்னணி வீரர்கள் அணியில் இல்லாத காரணத்தால் உம்ரான் மாலிக்கை இந்திய அணி தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது. ஆனால் உம்ரான் மாலிக் டி20 போட்டிகளுக்கு சரிப்பட்டு வரமாட்டார்.
இவரால் மணிக்கு 140-150 கிலோ மீட்டர் வேகத்தில் வீசமுடியும். டி20 போட்டிகளை பொருத்தவரை, வேகத்தை விட விவேகம் முக்கியம் அந்த விதத்தில் ஹர்ஷல் பட்டேல் சரியான வீரராக இருப்பார். எனவே இவர் ஒருநாள் போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட வைப்பதற்கு சரியான வீரராக இருப்பார்.
டெஸ்ட் போட்டிகளில் உம்ரான் மாலிக்கின் வேகம் நன்றாக எடுபடும். குறிப்பாக வெளிநாட்டு மைதானங்களில் சிறப்பாக செயல்படக்கூடியவராக வருவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றது என்பதால் அதற்காக அவரை பயன்படுத்த வேண்டும்" என்று கூறியுள்ளார். இதற்கு முன்னர் மூன்று டி20 போட்டிகளில் விளையாடி உள்ள உம்ரான் மாலிக், இரண்டு விக்கெட்டுகள் மட்டுமே எடுத்து 12.44 ரன்கள் எக்கனாமி வைத்திருக்கிறார். என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!
-
“அதிமுகவின் வாக்குறுதிகளுக்கு வாய் இருந்தால் கதறி அழுதிருக்கும்..” - பட்டியலிட்டு அமைச்சர் ரகுபதி தாக்கு!