Sports
ரூ.17.5 கோடி செலவு செய்தது எல்லாம் இதற்குதானா? IPL தொடரில் மும்பை அணிக்கு ஆப்பு வைத்த ஆஸ்திரேலியா !
உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐ.பி.எல் தொடர்தான். ஐ.பி.எல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பி.சி.சிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.
இதன் காரணமாக இதில் பங்கேற்க உலக நாடுகளின் வீரர்கள் தொடர்ந்து அணிவகுத்து வருகின்றனர். இந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் குஜராத் அணி கோப்பையைக் கைப்பற்றியது.அதைத் தொடர்ந்து 16 ஆவது ஐபிஎல் போட்டி 2023ம் ஆண்டு ஏப்ரல் - மே மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது
இந்த ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் கடந்த டிசம்பர் மாதம் 23-ம் தேதி கொச்சியில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய ஆள் ரவுண்டர் காமெரூன் கிரீனை மும்பை அணி 17.5 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. இதனால் இவர் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் தென்னாப்பிரிக்க அணியுடன் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின்போது இவருக்கு கை விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இதனால் அவரால் அடுத்த நான்கு வாரங்களுக்கும் பந்துவீச இயலாது என்றும், கூடுதலாக நான்கு வாரங்கள் நிபந்தனைகளுடன் கூடிய பந்துவீச்சிலேயே ஈடுபட வேண்டும் என்று அவருக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதன் காரணமாக அவருக்கு ஐபிஎல் தொடரில் விளையாட கட்டுப்பாடுகளை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விதித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, காமெரூன் கிரீன் வரும் ஏப்ரல் 13-ம் தேதி வரை பந்துவீச தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் ஐபிஎல் தொடரில் பங்கேற்றால் கூட அதில் அவர் பந்துவீச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை போட்டியை முன்வைத்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இந்த கட்டுப்பாடை விதித்திருப்பதாக கூறப்படுகிறது. அணிக்கு முக்கியமான வீரர் என்பதால், அவரது உடல்நிலை எங்களுக்கு முக்கியமானது. அடுத்தடுத்த தொடருக்கு அவரது பங்களிப்பு அவசியம் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.
Also Read
-
“சாதி ஆணவப் படுகொலையை தடுக்க தனிச் சட்டம் உருவாக்கப்படும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
-
“சிபிஐ விசாரிக்கப்பட வேண்டிய முதல் நபர் விஜய்தான்” - ‘தி இந்து’ தலையங்கத்தை மேற்கோள் காட்டிய ‘முரசொலி’!
-
சிறுநீரக முறைகேடு - பாரபட்சமின்றி அரசு நடவடிக்கை : அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!
-
“கடன் சுமையை பற்றி பேச அதிமுகவுக்கு தார்மீக உரிமை இல்லை” : பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்!
-
ரூ.18.1 கோடியில் பல்நோக்கு விளையாட்டரங்கங்கள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!