Sports

FIFA உலகக்கோப்பையை நீங்கள் எப்படி கையால் தொடலாம்?-சமையல்காரரின் செயலால் வெளிவந்த சர்ச்சை! பின்னணி என்ன?

22-வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் தொடங்கி தற்போது நிறைவுபெற்றுள்ளது. 32 நாடுகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் நடப்பு சாம்பியன் பிரான்சும், முன்னாள் சாம்பியன் அர்ஜெண்டினாவும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.

உலகக் கோப்பை மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் - அர்ஜெண்டினா அணிகள் நேற்றிரவு கத்தாரின் லுசைல் ஐகானிக் மைதானத்தில் மோதின. இந்த ஆட்டத்தில் ஆரம்பத்தில் இருந்து அர்ஜென்டினா அணி அதிரடி ஆட்டம் ஆடியது.

அதன்பலமாக 23வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் மெஸ்ஸி கோல் அடித்து அசத்த, அதனை அடுத்து 36-வது நிமிடத்தில் டி மரியா கோல் அடித்தார். ஆட்டத்தின் முதல் பாதியில் 2-0 என அர்ஜென்டினா அணி முன்னிலையில் இருந்த நிலையில், இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கியது.

ஆனால், அதன்ர் இறுதி சில நிமிடங்களில் அடுத்தடுத்து 2 கோள்களை அடித்து பிரான்ஸ் அணி அதிர்ச்சியளித்தது.90 நிமிட ஆட்ட நேர முடிவில் இரண்டு அணிகளும் 2-2 கோல் கணக்கில் சம நிலையில் இருந்ததை அடுத்து, போட்டி கூடுதல் நேர ஆட்டத்திற்கு சென்றது. அதில் இரண்டு அணிகளும் தலா ஒரு கோல் அடித்த நிலையில், போட்டி பெனால்டி கிக் முறைக்கு சென்றது. இதில் பிரான்ஸ் அணியை 4-2 என்ற கணக்கில் உலகமே எதிர்பார்த்த மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி வென்றி பெற்றது.

அதன்பின்னர் அர்ஜென்டினாவின் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் தங்கள் குடும்பத்துடன் இந்த வெற்றியை கொண்டாடினர். அப்போது துருக்கியை சேர்ந்த பிரபல கலைஞரான சால்ட் பே என்பவர் மைதானத்துக்குள் வந்து அர்ஜென்டினா வீரர்களுடன் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டார்.

மெஸ்ஸி , ஏஞ்சல் டி மரியா,லிசாண்ட்ரோ மார்டினெஸ் ஆகியோருடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட அவர் பின்னர் உலககோப்பையையும் கையில் ஏந்தி அதனை புகைப்படம் எடுத்துள்ளார். மேலும் , வெற்றியாளர்களுக்கு வழங்கப்படும் பதக்கத்தையும் கடித்து புகைப்படம் எடுத்துள்ளார்.

பின்னர் அவர் இந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட அது சர்ச்சையாகியுள்ளது. FIFA அமைப்பின் விதிமுறையின்படி உலகக்கோப்பையை வெற்றி பெற்ற அணியை சேர்ந்தவர்கள். முன்னாள் FIFA உலகக் கோப்பையை வென்றவர்கள், அணியின் இதர உறுப்பினர்கள் மற்றும் நாட்டுத் தலைவர்களை உள்ளடக்கிய மிகவும் முக்கியமானவர்கள் மட்டுமே தொடமுடியும்.

இந்த நிலையில்,சமையல் காரர் அதனை தொட்டுள்ளது சர்ச்சையை ஏற்பட்டுள்ளது. மேலும், அவரை மைதானத்தின் அனுமதித்த FIFA-வின் செயலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.

Also Read: "இரட்டை வேஷம் போடும் நபர்களை பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது" -வீரேந்திர சேவாக் கருத்தால் சர்ச்சை !