Sports
பயிற்சியின்போது காயம்.. இறுதிப்போட்டியில் களமிறங்குவாரா மெஸ்ஸி ? வெளிவந்த புதிய தகவல் !
கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 32 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் லீக் சுற்றுடன் 16 அணிகள் வெளியேறிய நிலையில், ‘ரவுண்டு ஆப் 16’ மற்றும் காலிறுதியுடன் பிரேசில், போர்ச்சுகல், இங்கிலாந்து, நெதர்லாந்து உள்பட பல முன்னணி அணிகள் வெளியேறிவிட்டன.
நடப்பு சாம்பியன் பிரான்ஸ், முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினாவும், முதல் முறை சாம்பியன் கனவில் குரோஷியா, மொராக்கோ அணிகள் அரையிறுதியில் களம் இறங்கின. முதல் அரையிறுதிப்போட்டியில் அர்ஜென்டினா அணி 3-0 என்ற கணக்கில் குரோஷியா அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
அதேபோல பல முன்னணி அணிகளுக்கு அதிர்ச்சி அளித்து இறுதிப்போட்டி வரை முன்னேறிய மொரோக்கோ அணியும் நடப்பு சாம்பியன் பிரான்ஸ் அணியின் அரையிறுதியில் மோதின. இதில் பிரான்ஸ் அணி 2-0 என்ற கணக்கில் மொரோக்கோவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இன்று பிரமாண்டமான இறுதிப்போட்டி நடைபெறும் நிலையில், இந்த போட்டியில் வெல்வது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதேநேரம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த போட்டியில் நட்சத்திர வீரர் மெஸ்ஸி ஆடுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏனெனில் அர்ஜென்டினா அணி பங்கேற்ற பயிற்சியில் மெஸ்ஸி கலந்துகொள்ளவில்லை.
இதனால் அவர் காயமடைந்ததாக பேசப்பட்ட நிலையில், தற்போது அவர் அணியோடு சேர்ந்து பயிற்சியில் ஈடுபடும் புகைப்படம் வெளியாகி அவரின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதன்மூலம் அவர் இறுதிப்போட்டியில் களமிறங்குவார் என்பதும் தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
Also Read
-
90% நிறைவடைந்த முதல்வர் விஜய் அறை மாற்ற வேலை : புதிய டெண்டர் விட்ட அரசு... சர்ச்சையில் பொதுப்பணித்துறை!
-
“திருவொற்றியூரில் மாணவர் கொலை.. கோமாளி சர்க்கார் மீது பயமில்லை” : உதயநிதி ஸ்டாலின் காட்டம்!
-
‘தவெக-வால் கட்டமைக்கப்பட்ட பொய்.. அமைச்சர் மரிய வில்சனால் அம்பலப்படும் விஜய்’ : முரசொலி விமர்சனம்!
-
தவெக அரசின் முதலீட்டாளர்கள் கூட்டம்.. திமுக முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் 5 கேள்விகள்!
-
‘தூய சக்தி ஆட்சியில் போதை சக்திகளின் நடமாட்டம்.. கொடூர ஆட்சிக்கு கோவையே சாட்சி’ : முரசொலி விமர்சனம்!