Sports

வங்கதேச பந்துவீச்சை சிதறடித்த இஷான் கிஷான் -விராட் கோலி ஜோடி.. உலகசாதனையை சமன் செய்து அசத்திய இந்திய அணி!

இந்திய அணி தற்போது வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த அணிக்கு எதிராக 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதன் முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். கே.எல்.ராகுல் மட்டுமே போராடி 73 ரன்கள் குவித்தார். முடிவில் இந்திய அணி 186 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

பின்னர் ஆடிய வங்கதேச அணியும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. 136 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து அந்த அணி தோல்வியின் இறுதி நிலையில் இருந்தது. எனினும் கடைசியில் அதிரடியாக ஆடிய மெஹதி ஹாசன் இறுதிவரை களத்தில் இருந்து அணியை வெற்றிபெற வைத்தார்.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் ஆடிய வங்கதேச அணி முதலில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தாலும் பின்னர் சுதாரித்து ஆடி 50 ஓவர்களில் 271 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய இந்திய அணி சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் காயம் காரணமாக இறுதியில் களமிறங்கிய அணி தலைவர் ரோகித் அதிரடி ஆட்டம் ஆடியும் அந்த போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்த நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் காயம் காரணமாக அணியின் இருந்து விலகிய ரோஹித் சர்மாவுக்கு பதில் இஷான் கிஷன் களமிறங்க கே.எல்.ராகுல் கேப்டன் பொறுப்பை ஏற்றார்.

இந்தப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்ய இந்திய அணி முதலில் களமிறங்கியது. தொடர்க வீரர் தவான் 3 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து இறங்கிய கோலியும், இஷான் கிஷனும் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதிலும் இஷான் கிஷன் வங்கதேச வீரர்களின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். அவருக்கு உறுதுணையாக கோலியும் சிறப்பாக ஆடிய நிலையில் இந்த ஜோடி வங்கதேச பந்துவீச்சை எளிதாக சமாளித்து சிதறடித்தது.

அறிமுக ஒருநாள் போட்டியில் சதமடித்த இஷான் கிஷன் அடுத்தடுத்தும் தனது அதிரடியைத் தொடர்ந்து இரட்டை சதம் விளாசி 210 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து விராட் கோலியும் சர்வதேச அரங்கில் தனது 72-வது சதத்தை பதிவு செய்து 113 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அவருக்கு பிறகு வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, இறுதியில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் அதிரடியாக 37 ரன்கள் குவிக்க இந்திய அணி 400 ரன்களை தாண்டியது. இறுதியில் இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 409 ரன்கள் குவித்தது. இதன்மூலம் இந்திய அணி 6 -வது முறையாக 400 ரன்களை தாண்டி அதிகமுறை 400 ரன்கள் குவித்த தென்னாபிரிக்க அணியின் சாதனையை சமன் செய்துள்ளது. அடுத்ததாக இமாலய இலக்கை துரத்தி வங்கதேச அணி விளையாடவுள்ளது.

Also Read: சாதனை புரிந்தும் தொடரில் இருந்து அழுகையுடன் வெளியேறிய நெய்மர்.. பிரேசிலுக்கு அதிர்ச்சி அளித்த குரோஷியா !