Sports
வரலாற்றில் முதன்முறை.. UP அணியை தோற்கடித்து Playoffs முன்னேறிய தமிழ் தலைவாஸ்: சூடுபிடிக்கும் PRO KABADDI!
ப்ரோ கபடி வரலாற்றில் தமிழ் தலைவாஸ் அணி முதன்முதலாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு ப்ரோ கபடி லீக் போட்டி அறிமுகமான தமிழ் தலைவாஸ் அணி அதன்பிறகு தொடர்ச்சியாக 4 ஆண்டுகள் லீக் சுற்றுடன் மட்டுமே விளையாடி வெளியேறியது.
இந்நிலையில் 9வது லீக் போட்டில் சிறப்பாக களம் இறங்கிய தமிழ் தலைவாஸ் அணி இம்முறை லீக் சுற்றில் இருந்து முன்னேறி ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது. அதுவும் பாலமான யுபி யோதாஸ் அணியை 43 - 28 என்ற புள்ளிகள் வித்தியாசித்தில் தமிழ் தலைவாஸ் அணி வீழ்த்தியுள்ளது.
இதன்மூலம் தமிழ்நாடு தமிழ் தலைவாஸ் அணி ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். இந்த சீசனில் 21 போட்டிகளில் விளையாடிய தமிழ் தலைவாஸ் அணி 10 போட்டிகளில் வெற்றி பெற்றும், 7 போட்டிகளில் தோல்வியை தலுவியும், 4 போட்டிகளை சமனும் செய்துள்ளது.
இதனால் புள்ளிகளின் பட்டியலில் 66 புள்ளிகள் பெற்று தமிழ் தலைவாஸ் அணி ப்ளே ஆப் சுற்றுக்கு இறுதி அணியாக தகுதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!