Sports
"சொந்த நாட்டு பிட்ச் தயாரிப்பாளர்களே எங்கள மதிக்கல" -தோல்வியைத் தொடர்ந்து புலம்பித்தள்ளும் பாபர் அசாம் !
17 வருடங்களுக்குப் பிறகு இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து அங்கு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது. ராவல்பிண்டியில் தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்த நிலையில், அந்த அணியில் வில் ஜாக்ஸ், லிவிங்ஸ்டன் ஆகிய இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகினர்.
கிட்டத்தட்ட 7 வருடங்களுக்கு பின்னர் டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பு பெற்ற டக்கட் மற்றும் கிராவ்லியும் தொடக்கவீரர்களாக களமிறங்கினர். இருவரும் இது டெஸ்ட் போட்டி என்பதையே மறந்து டி20 போட்டி போல பாகிஸ்தான் பந்துவீச்சை ஆரம்பத்தில் இருந்தே நாலாபுறமும் சிதறத்தனர். 13.4 ஓவர்களில் 100 ரன்களை எட்டிய இந்த ஜோடி தொடர்ந்து அதிரடியாக ஆடியது.
கிராவ்லி 122 ரன்களிலும், டக்கட் 107 ரன்களிலும் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் வந்த போப்பும் அதிரடியை தொடர்ந்த நிலையில், இடையில் ரூட் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.அதனைத் தொடர்ந்து போப்புடன் இணைந்து அதிரடியைத் தொடர்ந்த ஹாரி புரூக் 80 பந்துகளில் சதமடித்து 154 ரன்களுக்கும், போப் 90 பந்துகளில் சதமடித்த நிலையில், 108 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இறுதியாக இங்கிலாந்து அணி 101 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 657 ரன்கள் குவித்தது. அதிலும் ஒரே நாளில் ஒரே நாளில் 500 ரன்கள் குவித்த இங்கிலாந்து அணி டெஸ்ட் போட்டிகளில் ஒரு நாளில் அதிக ரன் குவித்த அணி என்ற பெருமையை பெற்றுள்ளது.அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 579 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அப்துல்லா, இமாம் உல் ஹாக், பாபர் அசாம் உள்ளிட்டோர் சதம் அடித்தனர். பின்னர் இரண்டாம் இன்னிங்க்ஸையும் அதிரடியாக ஆடிய இங்கிலாந்து அணி 35.5 ஓவர்களில் 267 ரன்கள் குவித்து அதிரடியாக டிக்ளர் செய்தது.
343 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய பாகிஸ்தான் அணி சீரிய இடைவெளியில் விக்கெட்டுகளை தொடர்ந்து வந்தது. எனினும் ஒரு கட்டத்தில் 176 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையே இழந்திருந்தது. இதனால் இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெறும் என்றே எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இறுதி கட்டத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 268 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் 74 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி அபார வெற்றிபெற்றது.
இந்த போட்டிக்கு பின்னர் தோல்வி குறித்து பேசிய பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம், "நாங்கள் போட்டிக்கு முன்னர் மைதானத்தை தயார் செய்பவரிடம் எங்களது திட்டத்தை கூறி, இப்படித்தான் பிட்ச் இருக்கவேண்டும் என எடுத்துச் சொன்னோம். அதற்கேற்றவாறு மைதானத்தை தயார் செய்வார் என எதிர்பார்த்து நாங்கள் பயிற்சியில் ஈடுபட்டோம். ஆனால் நாங்கள் எதிர்பார்த்தவாறு பிட்ச் இல்லை. ஆகையால் எங்களது பயிற்சியும் வீணாகியது. திட்டமிட்டபடி எங்களது எதுவும் நடக்காமல் போனது. அதனால்தான் சொந்த மைதானத்தில் தோல்வியடைந்தோம்" எனக் கூறியுள்ளார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!