Sports
FIFA உலகக் கோப்பையில் உலகசாதனை படைத்த Ronaldo.. அணி வீரர்களுக்கு விருந்தளித்து அசத்தல் !
கத்தாரில் ஃபிஃபா உலககோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகின்றது. இந்த தொடரில் கடந்த 24ஆம் தேதி நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கானா அணியை பலம்வாய்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோவின் போர்ச்சுக்கல் அணி எதிர்கொண்டது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் பெனால்டி மூலம் போர்ச்சுக்கல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடித்து அசத்தினார். அதன்பின்னர் போர்ச்சுக்கல் அணி இரண்டு கோல்கள் அடிக்க ஆட்டத்தின் முடிவில் போர்ச்சுக்கல் 3-2 என்ற கோல் கணக்கில் கானா அணியை வீழ்த்தியது.
இந்த போட்டியில் கோல் அடித்ததன் மூலம் தொடர்ந்து ஐந்து உலக கோப்பைகளிலும் கோல் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை ரொனால்டோ படைத்துள்ளார். இதற்கு முன்னர் 2006,2010,2014,2018 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற உலகக்கோப்பையில் ரொனால்டோ கோல் அடித்துள்ளார்.
இந்த போட்டி முடிந்த பிறகு வெற்றியை கொண்டாடும் விதமாக சக வீரர்களுக்கு இரவு உணவை ஏற்பாடு செய்து ரொனால்டோ அசத்தியுள்ளார். வரலாற்று சாதனையுடன் வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக அணி வீரர்களுடன் இரவு உணவருந்தி கொண்டாடி மகிழ்ந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
அடுத்ததாக போர்ச்சுக்கல் அணி வரும் 29-ம் தேதி நடைபெறும் போட்டியில் இரண்டு முறை உலகக்கோப்பையை வென்ற உருகுவே அணியை எதிர்கொள்ளவுள்ளது. இந்த போட்டியில் வெற்றிபெற்றால் போர்ச்சுக்கல் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“தி.மு.க.வை வகுத்தால் தமிழ்நாடு! தமிழ்நாடு மக்களை கூட்டினால் தி.மு.க!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
தந்தை பெரியார் பிறந்தநாள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “சமூக நீதி நாள்” உறுதிமொழி ஏற்பு !
-
எதிர்தரப்பு வாதங்களை கேட்காமலே அதானிக்கு ஆதரவாக வெளியான தீர்ப்பு... அதிர்ச்சி அளித்த நீதிபதிகள் !
-
“பச்சை, மஞ்சள் கலர் பஸ்ல யாரு வந்தாலும், கடைசியா பிங்க் கலர் பஸ்தான் ஜெயிக்கும்” - துணை முதலமைச்சர் கலகல!
-
என்றென்றும் ஒலிக்கும் குரல்... அன்றும்.. இன்றும்... என்றும் பெரியார்! - #HBDPeriyar147 !