Sports
அர்ஜென்டினாவை வீழ்த்திய வீரர்களுக்கு Rolls Royce கார் பரிசு.. அள்ளி கொடுக்கும் சவூதி அரேபியா அரசு!
கத்தாரில் FIFA உலகக் கோப்பை கால்பந்து தொடர் தொடங்கி லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதனால் உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனமும் கத்தாரை நோக்கியே இருக்கிறது.
இந்த தொடரில் கத்துக்குட்டி அணிகளுடன் ஜாம்பவான் அணிகள் அடுத்தடுத்து முதல் லீக் போட்டியிலேயே தோற்றுள்ளது கால்பந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இதனால் இந்த உலகக் கோப்பை தொடர் நட்சத்திர அணிகளுக்கே சவாலாக இருக்கும் என தெரிகிறது.
கால்பந்து உலகின் ஜாம்பவான் லியோனல் மெஸ்லி தலைமையிலான அர்ஜென்டினா அணி 2 -1 என்ற கோல் கணக்கில் சவூதி அரேபியாவுடன் முதல் போட்டியிலேயே தோல்வியடைந்தது இந்த ஆண்டின் மிகப்பெரிய ஆச்சரியங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஏன் என்றால் கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்ற போட்டிகளில் சவூதி அரேபியாவால் அர்ஜென்டினாவை வீழ்த்தவே முடியவில்லை.
மேலும், உலக தரவரிசையில் அர்ஜென்டினாவுக்கும் சவூதி அரேபியாவுக்கும் உடையே உள்ள வித்தியாசம் 48 இடங்கள். இதனால்தான் சவூதி அரேபியாவின் வெற்றி ஆச்சரியமாகப் பார்க்கப்படுகிறது.
இந்த வெற்றியை கால்பந்து உலகக் கோப்பையையே வென்று விட்ட அளவிற்கு சவூதி அரேபிய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். போட்டிகள் இன்னும் இருந்தாலும் அர்ஜன்டினாவுடனான வெற்றி என்று சவூதி அரேபியாவிற்கு ஒரு பிரம்மாண்ட மகுடமாகும்.
இதனால்தான் இந்த வெற்றியை தங்கள் நாடே கொண்டாட வேண்டும் என பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள் என ஒரு நாள் பொது விடுமுறை அறிவித்தது சவூதி அரேபிய அரசு. இதையடுத்து அர்ஜென்டினாவை வீழ்த்தி வெற்றி பெற்ற சவூதி அரேபிய வீரர்களுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசாக வழங்கப்படும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் இந்த ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசாக வழங்கப்படும் என்ற தகவலை சவுதி அரேபிய கால்பந்து வீரர் சாலா அல்ஷெக்ரி மறுத்துள்ளார்.
Also Read
-
வடகிழக்குப் பருவமழை - மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் அறிவுறுத்தல்!
-
”இந்தியாவின் ஏற்றுமதி துறைகளைப் பாதுகாக்க புதிய கொள்கையை வடிவமைக்க வேண்டும்” : TN CM Stalin வலியுறுத்தல்!
-
ஆன்லைன் பண மோசடி : பொதுமக்களுக்கு காவல்துறையின் எச்சரிக்கை என்ன?
-
அதானிக்கு தாரை வார்க்கப்பட்ட புதுச்சேரி மின்துறை - இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு !
-
செப்.1 முதல் ‘நெல் கொள்முதல் விலை’ அதிகரிப்பு! : விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு சிறப்பு உத்தரவு!