Sports
உடைந்த தாடை எலும்பு.. உலக கோப்பையில் படுகாயமடைந்த வீரர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி.. நடந்தது என்ன ?
உலகமக்கள் ஆவலோடு எதிர்பார்த்து வரும் உலகக்கோப்பை கால்பந்து தொடர் மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான கத்தாரில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் இரண்டாவது நாள் போட்டியில் இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லியோனல் மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி சவூதி அரேபியாவை எதிர்கொண்டது. இந்த போட்டியில் அர்ஜென்டினா சவூதி அரேபியாவை ஊதித் தள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், போட்டியின் தொடக்கம் முதலே அர்ஜென்டினாவின் கைதான் ஓங்கி இருந்தது.
ஆட்டத்தின் 7-வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் நடுகள வீரர் பாரடேஸை சவூதி அரேபிய வீரர் பெனால்டி பகுதியில் கீழே தள்ளி விட்ட நிலையில், அர்ஜென்டினாவுக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் நட்சத்திர வீரர் மெஸ்ஸி கோல் அடித்து அணிக்கு முன்னிலையை ஏற்படுத்தி கொடுத்தார். ஆனால் இரண்டாம் பாதியில்தான் உலகத்துக்கே ஆச்சரியம் காத்திருந்தது.
இரண்டாம் பாதி தொடங்கிய சிறிது நேரத்தில் (47-வது நிமிடம் ) சவூதி அரேபிய வீரர் சலாஹ் அல் ஷெக்ரி இடதுபுறத்தில் இருந்து ஒரு அருமையான கோலை பதிவு செய்தார். அதன்பின்னர் அடுத்த 5 நிமிடத்தில் அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. ஆட்டத்தின் 52-வது நிமிடத்தில் சவூதி அரேபிய வீரர் சலீம் அல் டவ்சரி அதே இடதுபுறத்தில் இருந்து கோல் அடித்து சவூதி அரேபியாவுக்கு முன்னிலை ஏற்படுத்தி கொடுத்ததோடு அரங்கத்தில் குழுமியிருந்த அர்ஜென்டின ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.
இந்த முன்னிலையொடு ஆட்டம் முடிவுக்கு வந்ததில் அர்ஜென்டினா சவூதி அரேபியாவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்திருந்தது. இந்த போட்டியின்போது இரண்டாவது பாதி ஆட்டத்தில் இறுதி நேரத்தில் கோலை நோக்கி வந்த பந்தை சவுதி கோல்கீப்பர் தடுக்க முயல அவரின் கால் சக வீரர் அல் ஷாரானி முகத்தில் தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த அவர் கீழே விழுந்து வலியில் துடித்தார். பின்னர் மைதானத்தில் இருந்து வெளியே கொண்டுபோகப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், அவருக்கு ஷாரானி தாடை எலும்பு, முக எலும்புகள் உடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக கத்தாரில் இருந்து அவர் சவூதி தலைநகர் ரியாத் கொண்டுசெல்லப்பட்டு அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக அவர் தனி விமானத்தில் சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் உத்தரவின் படி, ஜெர்மனி கொண்டுசெல்லப்பட்டுள்ளார். அவருக்கு சவூதி அரசு சார்பில் உயர்சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.
Also Read
-
இந்தி திணிப்பு : "பாஜகவுக்கு தமிழ்நாடு மறக்க முடியாத பாடத்தை மீண்டுமொருமுறை கற்பிக்கும்" - முதலமைச்சர் !
-
பெருங்கவிக்கோ வா.மு சேதுராமன் மறைவு : காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் உத்தரவு !
-
’உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் : ஜூலை 15 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”தொப்பியும், பதக்கமும் கொடுத்தால் பிரதமர் மோடி எங்கும் செல்வார்” : மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்!
-
”சினிமாவில் மறந்துபோய்கூட கடவுளிடம் கோரிக்கை வைக்காதவர் கலைஞர்” : எழுத்தாளர் இமையம்!