Sports
டி20 உலகக்கோப்பை தோல்வி எதிரொலி.. இந்திய அணியின் தேர்வுக்குழுவை கூண்டோடு கலைத்து BCCI அதிரடி !
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில்பாகிஸ்தான்-இங்கிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய இங்கிலாந்து அணி இரண்டாவது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியது.
இந்த உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது. உலகக்கோப்பையை வென்ற இங்கிலாந்து அணிக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் மோசமான தோல்வியை சந்தித்த இந்திய அணியை பலரும் விமர்சித்து வருகின்றனர்.
அணியின் தொடக்கவீரர்கள், பந்துவீச்சாளர்கள் போன்ற வீரர்கள் தேர்வில் அணி நிர்வாகம் மோசமாக சொதப்பியதாகவும் தொடர்ந்து விமர்சனம் வைக்கப்பட்டுள்ளது. அதிரடியாக ஆடும் இளம்வீரர்களை அணியில் தேர்வு செய்திருக்க வேண்டும் என்றும், ஆனால் பழைய பாணியில் ஆடும் வீரர்களே அணியில் நிறைந்து இருக்கிறார்கள் என்றும் விமர்சனம் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இது போன்ற விமர்சனங்கள் காரணமாக இந்திய அணியை தேர்வு செய்யும் தேர்வுக்குழுவை கூண்டோடு கலைத்து பிசிசிஐ அதிரடி காட்டியுள்ளது. முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வுக் குழுவில், சுனில் ஜோஷி (தெற்கு மண்டலம்), ஹர்விந்தர் சிங் (மத்திய மண்டலம்) மற்றும் தேபாஷிஷ் மொஹந்தி (கிழக்கு மண்டலம்) ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
இவர்கள் அனைவரும் தற்போது நீக்கப்பட்டு தேர்வு குழுவுக்கு புதிய விண்ணப்பங்கள் ஏற்கப்படும் என்றும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க நவம்பர் 28 ஆம் தேதி மாலை 6 மணி வரை காலக்கெடு என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.
அதெல்லாம் வரும் வங்கதேச சுற்றுப்பயணத்துக்கான அணியை கடைசியாக சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வுக் குழு தேர்வு செய்யும் என்றும், அதன்பின்னர் அடுத்த தொடர் நடைபெறும் முன்னர் புதிய உறுப்பினர்கள் பொறுப்பேற்பார்கள் என்றும் பிசிசிஐ-யின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Also Read
-
"தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்" - அமைச்சர் தங்கம் தென்னரசு !
-
"தனி மனிதரை விட தத்துவங்கள்தான் அரசியலை வழிநடத்தும்" - சுதர்சன் ரெட்டிக்கு முதலமைச்சர் ஆதரவு !
-
Drop Test சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்த இஸ்ரோ... பத்திரமாக கடலில் இறங்கிய விண்கலன் !
-
அகற்றப்படும் பழைய பாம்பன் ரயில் பாலம்... நினைவு சின்னமாக பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை !
-
ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள்.. கரூர் பாஜக நிர்வாகியை கைது செய்த போலீஸ் !